Advertisement

பக்க வாத்தியம்

தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடிய, 'மாஜி' மந்திரி

கரூர் மாவட்ட, தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இறுதியாக பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன், 'தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு, தற்போது சிலர் எழுந்து நின்று, மரியாதை கொடுக்க மறுக்கின்றனர். நாம் எழுந்து நின்று, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி கூட்டத்தை முடிப்போம்' என்றார்.

இதன்படி, அனைவரும் எழுந்து நிற்க, சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். ஆனால், 'அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற' என்ற வரிகளைப் பாடாமலேயே வாழ்த்தை பாடி முடித்தார்.

தி.மு.க.,வினர் சிலர், 'தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் எண்ணம் இருந்தால், ஒரு முறை பயிற்சி செய்துவிட்டு வந்திருக்கலாம்... இல்லா விட்டால் பாடாமல் இருந்திருக்கலாம்' என, புலம்பியபடி சென்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எழுந்து நின்றால் மட்டும் பாடலுக்கு மரியாதை கொடுத்தால் போதும் நாலு வரிப் பாடலைக்கூடப் பிழையின்றிப் பாட முடியாதவர்கள் செய்யும் 'மரியாதை இது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement