Advertisement

அறிவியல் ஆயிரம்

மாற்றப்பட்ட மருத்துவ பதவிகள்



இந்தியாவில், ஜனவரி கடைசியில் துவங்கி பிப்ரவரி வரை தொழு நோய் விழிப்புணர்வு இருவார விழா கொண்டாடப்படுகிறது. தொழு நோயின் தாக்கம் இந்தியாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது. எனவே தான் "லெப்ரசி இன்ஸ்பெக்டர்கள்' எனப்படும் தொழு நோய் ஆய்வாளர்கள் தற்போது சுகாதாரப் பணியாளர்களாக உள்ளனர். கடந்த காலத்தில் தொழுநோய் தாக்கம் அதிகளவில் இருந்தது. அதனால், தொழுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது எளிதாக இருந்தது. தற்போது தொழுநோயாளிகளை பார்ப்பது அரிதாக உள்ளதால், அவர்களை ஆரம்ப அறிகுறியால் கண்டுபிடிப்பது மருத்துவதுறைக்கு மிகவும் சவாலாக உள்ளது.


தகவல் சுரங்கம்

சர்வசமய வழிபாட்டுத்தலம்



சிங்களத்தில் "சிறிபாத" என அழைக்கப்படுகின்ற இலங்கையின் புனித சுற்றுலாத்தலம், இந்துக்களால் 'சிவனொளிபாதம்' என அழைக்கப்படுகின்றது. . இஸ்லாமியர் இதனை, 'பாவா ஆதம் மலை' என்று சிறப்பிக்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி உயரத்தில் கூம்பு வடிவில் இந்தமலை உள்ளது. இம்மலையானது சபரகமுவா, மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் பாறை அமைப்பு, கவுதம புத்தரின் காலடிச் சுவடாக பவுத்தர்களால் கருதப்படுகிறது, சிறிபாதாவில் ஜப்பானியர்களால் கட்டப்பட்ட 'அமைதி ஸ்துாபி' உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement