Advertisement

பக்க வாத்தியம்

'ஐஸ்' போதும்; 'ஜூஸ்' கொடுங்க...!



துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி மின் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில், மின் துறை அமைச்சர் தங்கமணி, 'லேசான மழை வந்தால் கூட, மக்கள் எல்லாம் நனையாமல் ஒதுங்க பார்ப்பர். கனமழை வந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தங்கள் பணியில் கவனமாக இருப்போர், மின் வாரிய ஊழியர்கள்; தங்கள் குடும்பத்தை கூட கவனிக்காமல், இரவு, பகல் என, உயிரை பணயம் வைத்து வேலை செய்யக்கூடியோர்' என, புகழ்ந்து பேசினார்.

அதை கேட்ட ஊழியர் ஒருவர், 'சார், எங்களை, 'ஐஸ்' வைச்சு பேசுற நீங்க, ரெண்டு வருஷமா, இழுத்தடிக்கிற ஊதிய உயர்வையும், உடனே அறிவிச்சீங்கன்னா, எங்களுக்கு, 'ஜூஸ்' குடிச்ச மாதிரி இருக்கும்' என முணுமுணுக்க, அருகில் இருந்தோர் நகைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement