Advertisement

சொல்கிறார்கள்

சிறுமி முதல் வயதான பெண்கள் வரை தாக்கும்

மகப்பேறு மருத்துவர் நிவேதிதா: சில பிரச்னைகள், இளவயது பெண்களை பாதிக்கும். இன்னும் சில நடுத்தர வயது பெண்களையும், வேறு சில, மெனோபாஸ் கட்டத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும்.

பைப்ராய்ட்ஸ் என்ற கட்டி எந்த பேதமும் பார்ப்பதில்லை; பூப்படைந்த சிறுமி முதல், மெனோபாசை நெருங்கிக் கொண்டிருப்பவர் வரை, வயது வித்தியாசமின்றி, யாரை வேண்டுமானாலும் தாக்கக்கூடியது.

பைப்ராய்ட்ஸ், மயோமா இரண்டுமே ஒன்று தான்; அதாவது, கர்ப்பப்பை கட்டி. குழந்தையின்மைக்கான காரணங்களில், பைப்ராய்ட்சுக்கு முக்கிய பங்குண்டு. மாதவிடாயின்போது, கர்ப்பப்பையின் உள்சுவர் தான், ரத்தப்போக்காக வெளியே வருகிறது.

மாதவிடாய் காலம் முடிந்ததும், உதிர்ந்த உள்சுவாரானது, புதிதாக வளர ஆரம்பிக்கும். இதுதான் சாதாரணமாக நடக்கும் விஷயம். உதிரவேண்டிய உள்சுவரானது, சிலருக்கு முழுமையாக வெளியேறாமல் தங்கிப் போகலாம்.

அதுதான், 'எண்டோ மெட்ரியோசிஸ்' எனப்படுகிறது. அதாவது, 75 சதவீத உள் சுவர் லேயர் உதிர்ந்து, 25 சதவீதம் தங்கினாலும், இப்படி நடக்கலாம்.ரத்தம் என்பது கிருமிகளை கவர்ந்திழுக்கிற விஷயம்.

இப்படி மிச்சமிருக்கும் ரத்தத்தில், இன்பெக் ஷன் உண்டாகி, வீங்கி, அதுவே, பைப்ராய்ட்ஸ் எனப்படுகிற கட்டிகளாக உருவெடுக்கலாம்.மாதவிடாய் நாள்களில், மிக கடுமையான வலியும், வழக்கத்தை விட அதிகமான ரத்தப்போக்கும் தான், இதன் முக்கிய அறிகுறிகள்.

வலி இருக்கும்போதே, ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கட்டி இருப்பது உறுதியானால், முதல் கட்டமாக, மருத்துவர் அதன் அளவை பார்த்து, மாத்திரைகள் தருவார். தாங்க முடியாத வலியையும், அதிகப்படியான ரத்தப் போக்கையும் அது கட்டுப்படுத்தும்.

வலியும், வேதனையும் சரியாகி விட்டதே என, அலட்சியமாக இருந்தால், நாளடைவில் கட்டி பெரிதாகலாம். கட்டியின் அளவு, 10 செ.மீ.,க்குள் இருந்தால், அதை, 'லேப்ராஸ்கோப்பி' சிகிச்சையிலேயே சுலபமாக அகற்றி விடலாம். அதைவிட பெரிய கட்டி இருந்தால், அறுவை சிகிச்சை தேவைப்படும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement