Advertisement

பக்க வாத்தியம்

'தப்ப ஒத்துக்கிற இவரு ரொம்ப நல்லவரு!'
சென்னை, அம்பத்துாரில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'சென்னை, ஆர்.கே., நகர் இடைத்தேர்தல், எப்படி நடந்தது என்பது, அனைவருக்கும் தெரியும்.
அ.தி.மு.க., தொண்டர்கள் கடுமையாக உழைத்தாலும், கொஞ்சம் கண் அயர்ந்து விட்டனர்; அப்போது, எதிரிகள், 20 ரூபாய் நோட்டால், அனைவரின் கண்களையும் மறைத்து, வெற்றியை தட்டிப் பறித்துக் கொண்டனர். இனி, அதுபோல் நடக்காமல், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; அப்போது தான், கட்சி, ஆட்சியை தக்க வைக்க முடியும்' என்றார்.

மூத்த தொண்டர் ஒருவர், 'அது சரி... ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., என, இரு அணிகளும் ஒற்றுமையாக வேலை செய்யலங்கறதை ஒத்துக்கிறாரு' எனக் கூற, தொண்டர்கள், தலையசைத்து ஆமோதித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement