Advertisement

தங்கத்தை சுரக்கும் பாக்டீரியா!

பொன் சுரக்கும் பேக்டீரியா வகை ஒன்று இருப்பது பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஆனால் 'சி.மெடாலிடியூரன்ஸ்' எனும் அந்த பாக்டீரியா எப்படி நேனோ அளவு தங்கத்தை உற்பத்தி செய்து தள்ளுகிறது என்பதுதான் பெரிய புதிராக இருந்தது.
தற்போது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அந்த ரசவாதம் என்ன என்பதை ஓரளவு தெரிந்து தெளிந்திருக்கின்றனர். 'அப்ளைடு என்விரோன்மென்டல் மைக்ரோபயாலஜி' இதழில் இரு நாட்டு விஞ்ஞானிகளும் தங்கள் ஆய்வினை பகிர்ந்துள்ளனர்.
அதன்படி, பல உயிரிகளால் தாங்க முடியாத நச்சுத் தன்மை உள்ள மண்ணில்தான் சி.மெடாலிடியூரன்ஸ், வளர்கிறது. அதற்கு செம்பு உலோக தாதுக்கள் தான் உணவு. ஆனால், செம்பினை அளவுக்கு அதிகமாக உண்ண முடியாத அந்த பாக்டீரியா, தங்கத் தாதுக்களையும் உட்கொள்கின்றன.
அவற்றை ஜீரணிக்க வினோதமான வேதிவினையை நிகழ்த்தி சிறிதளவு செம்பை செறிமானம் செய்து, தங்கத் தாதுவை உலோகமாக மாற்றி வெளியேற்றிவிடுகின்றன.
தற்போது, தங்கத் தாதுவிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க, நச்சு மிக்க பாதரசத்தைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
சி.மெடாலிடியூரன் நிகழ்த்தும் இந்த வேதிவினையை மேலும் ஆராய்ந்தால், அவற்றை பயன்படுத்தி, தங்கத் தாதுக்களிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க, அவற்றையே பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement