Advertisement

அறிவியல் ஆயிரம்

வர்த்தகமயமாகும் விபூதி
நாட்டுப்பசுவின் சாணத்தை மூட்டம் போட்டு, விபூதி தயாரிக்கப்பட்டது. விபூதி என்றாலே,சமஸ்கிருதத்தில் செல்வம் என்று அர்த்தம். நீறு பூத்த நெருப்பு முறையில் உருவாக்கப்பட்டதால், தமிழில் திருநீறு ஆனது. தற்போது கிடைக்கும் துாய சாணத்தின் அளவு குறைவு என்பதால், டாலமைட் பவுடர் விபூதியில் கலப்பட பொருளாக சேர்க்கப்படுகின்றது. சில இடங்களில் காகித ஆலைகளில் இருந்து வெளிப்படும் சாம்பல் தான் விபூதியாக தரப்படுகின்றது. பைனக்ஸ் பவுடர், போம் பவுடர் வாசனைக்காக ஆல்கஹால் கலக்கப்பட்ட சென்ட் போன்றவை கலக்கப்படுவதால் தோலைப் பாதிக்கின்றன.

தகவல் சுரங்கம்



சர்வோதய தினங்கள்
மகாத்மா காந்தியடிகள் மறைந்த ஜனவரி 30ம் தேதி முதல், அவரது அஸ்தி கரைக்கப்பட்ட பிப்ரவரி 12 வரை உள்ள 14 நாட்கள் 'சர்வோதய பட்சம்' என இந்தியா முழுவதும் நடத்தப்படுகின்றது. காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்ட இடங்களான சென்னை கடற்கரை, காவிரி மற்றும் தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள், ராமேஸ்வரம் கடல், கரிவலம்வந்த நல்லுார் நிட்சேப நதி உள்ளிட்ட இடங்களில் அஸ்தி கரைக்கப்பட்டது. சில இடங்களில் அஸ்தியை பாதுகாத்து வைத்து, அஸ்தி பீடம் கட்டியுள்ளனர். இந்த இடங்களில் பிப்ரவரி 12ல் காந்தியடிகளின் 'அஸ்தி நாள்' கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement