Advertisement

சொல்கிறார்கள்

மாதம், ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கிறது!

மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பத்தால், வெட்டிவேர் மூலிகையில் பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும், புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்தன்: வெட்டிவேரிலிருந்து மனிதர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை உருவாக்கலாம் என யோசித்து, அதற்கான முயற்சியில் இறங்கினேன்.

செருப்பு, பெல்ட், பர்ஸ், திரைச்சீலை, பாய் என, ஏராளமான பொருட்களை அறிமுகப்படுத்தினோம்.வழக்கமாக நாங்கள் தயாரிக்கும் பொருட்களோடு, வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் பொருட்களையும் செய்து கொடுக்கிறோம். அதில் குறிப்பிடத்தக்கது, வீணாகும் கார் டயர்களை வைத்து, வடிவமைக்கும் சேர்.

வெட்டிவேரில் செருப்பு தயாரிக்கும் போது, வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். ஏனெனில், கைத்தறி மூலம் நெசவு செய்யும் போது, தினசரி, 3 மீ., அளவுக்கே வெட்டிவேரை நெய்ய முடியும். நெசவு செய்ய, மூன்று நபர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.

எனவே, வெட்டிவேர் செருப்பை தயார் செய்து, 500 ரூபாய்க்கு தருகிறோம். இந்த செருப்பானது, வெப்பத்தை குறைத்து, உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவதாக, வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.தமிழகத்தில், கடலுாரில் அதிக அளவில் வெட்டிவேர் கிடைப்பதால், அங்கிருந்து வாங்கி பயன்படுத்துகிறோம்.

தற்போது, வெட்டிவேர் செருப்பு உட்பட, 60க்கும் மேற்பட்ட பொருட்களை, தமிழகம் முழுவதும் வழங்குகிறோம். 'இந்தியா வெட்டிவேர் நெட்வொர்க்' சார்பில் சந்தைப்படுத்தி வருகிறோம்.அது மட்டுமின்றி, வெட்டிவேர் பொருட்களை தயாரிப்பது குறித்த பயிற்சியும் அளித்து வருகிறேன்.

மேற்கு வங்கத்திலிருந்து எங்களிடம் வந்து பயிற்சியெடுத்து சென்றவர்கள், பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். வெட்டிவேர் மட்டுமின்றி, வெட்டிவேர் புல், ஹோலிகிராஸ், வாழைநாரிலும் பொருட்களை தயாரித்து வருகிறோம்.

மாதம் ஒன்றுக்கு, மூலப்பொருள், 20 ஆயிரம் ரூபாய், அதை பதப்படுத்த, 30 ஆயிரம், பொருள் உற்பத்திக்கு தேவையை பொறுத்து, 20 - 30 ஆயிரம் என, 70 ஆயிரம் ரூபாய் செலவாகும்.சராசரியாக, பொருட்கள், 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்பதன் மூலம், மாதம், 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

தற்போது, சென்னையிலும், திண்டுக்கல்லிலும், 'கேஷ் ஆன் டெலிவரி'யை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இதுவே, இப்போதைய இலக்கு; படிப்படியாக மாநிலம் முழுவதும் கொண்டு போக வேண்டும் என்பது, எதிர்கால இலக்கு.எங்கள் அனைத்து பொருட்களையும், ஆன்லைனில், 'TINGOBEE.COMhttp://TINGOBEE.COM' என்ற வலைதளத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறோம்.எங்கள் அனைத்து பொருட்களையும், ஆன்லைனில், 'TINGOBEE.COM' என்ற வலைதளத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறோம்.தொடர்புக்கு: 98439 51618

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement