Advertisement

சொல்கிறார்கள்

புரோகோலியை அதிகம் வெப்பப்படுத்த கூடாது!



கேன்சரை தடுக்க சாப்பிட வேண்டியவை குறித்து கூறும், இயற்கை மருத்துவர், தீபா: கேன்சர் நோய்க்கு முக்கிய காரணம், உணவு வழக்கங்களில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம் தான். செக்கு எண்ணெய்; நாமே அரைத்தும், இடித்தும் செய்யும் மசாலா பொடி; வீட்டில் வேக வைத்து தயாரிக்கும் இயற்கையான உணவு முறைக்கு மாறுவது தான், கேன்சர் அசுரனிடமிருந்து தப்ப, தீர்வாக அமையும்.

கேசன்சரை வர விடாமல் தடுப்பதிலும், வந்தவர்களுக்கு அதை விரைந்து குணப்படுத்துவதிலும் பூண்டு முக்கிய பங்குடையது. தினமும், நான்கு பச்சை பூண்டு பற்களை மென்று தின்றால் போதும்; கேன்சருக்கு மட்டுமல்ல, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ராலையும் குணப்படுத்தும்.

பசலை கீரையும், கேன்சருக்கு மருந்து. இது, உடலில் தங்கியுள்ள நச்சுத்தன்மையான, 'பிரீரேடிகல்' செல்களை வெளியேற்றுகிறது. கேரட்டில் அதிகமுள்ள, 'பீட்டா கரோட்டின்' என்ற ஆன்டி ஆக்சிடன்ட், கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துவதோடு, உடல் செல்களை அழிப்பதையும் தடுக்கிறது. தக்காளியின் சிவப்பு நிறத்துக்கு, 'லிகோபின்' என்ற ஆன்டி ஆக்சிடன்டே காரணம்.

இது, பெண்களின் மார்பக கேன்சர் மற்றும் குடல் சம்பந்தமான கேன்சரையும், ஆண்களின் புராஸ்டேட் கேன்சரையும் குணப்படுத்துகிறது. தக்காளியை பச்சையாகவோ, ஆப் பாயிலாகவோ சாப்பிடுவது நல்லது. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், கேன்சரை உருவாக்கும், வீக்கமடைந்த செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. குறிப்பாக, ஜீரணமண்டலத்தில் ஏற்படும் கேன்சரை தடுக்கிறது; ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

புரோகோலியில் உள்ள, இரண்டு வகையான ஆன்டி ஆக்சிடன்ட்டுகள், வயிறு, மார்பு, கர்ப்பப் பைகளில் உருவாகும் புற்றுநோய் செல்களை வெளியேற்றுகிறது. புரோகோலியை அதிகம் வெப்பப்படுத்தக் கூடாது. இஞ்சியில் உள்ள, 'ஜிஞ்ஜெரால்ஸ்' என்ற ஆன்டி ஆக்சிடன்ட், லுாக்கேமியா என்ற ரத்த புற்றுநோயை குறைக்கிறது. ஆண்களின் புராஸ்டேட் கேன்சரையும், பெண்களின் மார்பக கேன்சரையும் எதிர்க்கிறது.

சூரியகாந்தி, பூசணி மற்றும் எள் விதைகளும், பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நெட், உலர்ந்த திராட்சை, சோயா, பட்டாணி போன்ற பருப்புகளும், கேன்சர் செல்களை அழிக்கின்றன. பீன்ஸ், கேரட், பூசணி, கீரை நான்கையும் சேர்த்தால், பரம்பரையாக ஏற்படும் கேன்சர் வர விடாமல் தடுக்கிறது. மேலும், பச்சைக் காய்கறிகளோடு, முளைக்கட்டிய பயறுகளை சேர்த்து சாப்பிடுவதால், பரம்பரையாக வரும் கேன்சரை தடுக்கலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement