Advertisement

பக்க வாத்தியம்

'ரூ.200க்கே இவ்வளவு, 'பில்டப்'பா...'



தேனியில், முன்னாள், எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் தினகரன் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேனியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, முதியோர், பெண்கள் என, ஏராளமானோர் மினி பஸ், வேன் உள்ளிட்ட, வாகனங்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர். மேடையில் நிர்வாகி ஒருவர், 'அடுத்த முதல்வர் தினகரன்; துணை முதல்வர் தங்க தமிழ்ச்செல்வன்' என, முழங்கினார்.

அதைத் தொடர்ந்து, தங்க தமிழ்ச்செல்வன், 'அ.தி.மு.க., தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கின்றனர் என, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., தம்பட்டம் அடிக்கின்றனர். இங்கு கூடியுள்ள கூட்டத்தை பாருங்கள்... தொண்டர்கள் அனைவரும், எங்கள் பக்கம் இருப்பது தெரியும். நான், கூட்ட மேடைக்கு வரவே, ஒரு மணி நேரம் ஆனது' என்றார்.

குசும்புகார நிருபர் ஒருவர், '200 ரூபாய் தந்தால் கூட்டம் வரத்தான் செய்யும். ஆலோசனை கூட்டத்துக்கே, இவ்வளவு, 'பில்டப்'பா... இதுல புதுக் கட்சி, முதல்வர், துணை முதல்வர் கனவு வேற' எனக் கூற, மற்ற நிருபர்களும் அதை ஆமோதித்தபடி கிண்டலாக சிரித்து கலைந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • vaishnavi - nainital,இந்தியா

    ஆசை யாரை விட்டது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement