Advertisement

அறிவியல் ஆயிரம்

மண்வளம் காக்கும் சாக்குகள்
நெல் அறுவடையின் போது, தமிழகத்தில் சாக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேற்குவங்கத்தில் தான் சணல் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. வங்கமொழியில், சணலை 'தங்க இழை' என குறிப்பிடுகின்றனர். சணல் உற்பத்தி குறைவு, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றால் சணல் சாக்குகளுக்கு பதிலாக பாலி எத்திலீன், துணிச்சாக்குகள் வந்துவிட்டன. இதனால் சணல் சாக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சணல் சாக்குகள் உபயோகத்துக்கு பின், மண்ணில் எளிதில் மக்கும் தன்மை உடையன. பாலி எத்திலீன் சாக்கு மக்காது. சணல் சாக்கு தவிர பிறவற்றில், உணவு தானியங்களைப் பாதுகாப்பதால், உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும்.
தகவல் சுரங்கம்
கவுதமி எக்ஸ்பிரஸ்
தட்சிண கங்கை எனப்படும் கோதாவரி ஆற்றின் துணை ஆறான கவுதமி ஆற்றினை சிறப்பிக்கும் வகையில் இந்திய ரயில்வே, 'கவுதமி எக்ஸ்பிரஸ்' ரயிலை இயக்குகிறது. இந்த ரயில் ஆந்திராவின் காக்கிநாடா - செகந்திராபாத் இடையே ஓடுகின்றது. அதிக பெட்டிகளுடன், இந்தியாவின் நீளமான ரயில்களில் ஒன்றாக இது உள்ளது. விசாகபட்டினம் - ஐதராபாத் இடையே இயங்கும் கோதாவரி எக்ஸ்பிரசின் 'சகோதரி ரயில்' என கவுதமி எக்ஸ்பிரஸ் ரயிலை கூறுவர். ராஜமுந்திரி, ஏலுார், விஜயவாடா, கம்மம், வாரங்கல், காசிபேட் வழியாக, இந்த கவுதமி எக்ஸ்பிரஸ் ரயில் ஓடுகின்றது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement