Advertisement

சொல்கிறார்கள்

மற்றவர்கள் மனதை புண்படுத்த கூடாது!
'கானா' பாடும் பெண்களில் ஒருவரான சுஜி ஷாலு: எனக்கு சிறு வயது முதலே, 'கானா' ரொம்ப பிடிக்கும். மைக்கேல் பாடல்களை விரும்பி கேட்பேன். எங்கள் பள்ளியில் கானா பாடும் பையன்களுடன் சேர்ந்து, பாட ஆரம்பித்தேன். காலேஜ் செல்வதற்காக பஸ்சில் போகும் போது நிறைய பாடுவேன்.அதன் பின், நானும், என் ப்ரெண்டு ஜாக்குலினும் சேர்ந்து, 'எங்கம்மா சொல்லுச்சிடா அப்போவே'ன்னு ஒரு கானா பாட்டை பாடி, 'வாட்ஸ் - ஆப், யூ - டியூப்'பில் வெளியிட, பயங்கர, 'ஹிட்' ஆனது.

எங்கள் வீட்டு அருகில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம், ஸ்பீக்கரில் அந்த பாட்டை கேட்கும் போது, அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.சினிமா பாடல்கள் எல்லாம் ரசிக்கும் மாதிரி இருக்கும்; ஆனால், கானா பாடல்கள் தான், உங்கள் மனதை அப்படியே வார்த்தைகளில் பாட முடியும். நான் இதுவரை மூன்று பாடல்கள் பாடி இருக்கிறேன்.

கடைசியாக பாடியது, 'டெங்கு' விழிப்புணர்வு பாடல். ஏதோ எங்களால் முடிந்த முயற்சியாக, 'தண்ணியை திறந்து வைக்காதீங்க; தேங்க விடாதீங்க; சுட வெச்சு குடிங்க...'ன்னு கானா பாட்டு எழுதினோம். ஏற்கனவே இருக்கும், சினிமா அல்லது கானா பாடல்களின் ட்யூனையோ எடுத்து, அதற்கு புதிதாக பாடல் எழுதி பாடுவோம். என்னுடைய, 'எங்கம்மா' பாட்டை கேட்டு, நிறைய பேர், குறிப்பாக பெண்கள், போன் செய்து பாராட்டினர்.

பையன்கள், 'என்னக்கா துாள் கிளப்புறீங்க; எங்க ஏரியா பொண்ணுங்க எல்லாம் இந்த பாட்டை பாடி தான் கலாய்க்குதுங்க'ன்னு உற்சாகப்படுத்தினர். அடுத்த பாட்டு இதைவிட வெயிட்டாக இருக்கும்.கானாவை பலரும் மதிப்பதில்லை.

காதல் தோல்வி பாடல் முதல், இரங்கல் பாடல் வரை, கானாவில் ஓர் உயிர் இருக்கும். அந்த பாடல்களுக்கும், அதைப் பாடுபவர்களுக்கும் உண்டான மரியாதை, அங்கீகாரம் கிடைக்க வேண்டும். எங்களுக்கு, கானா, தொழில் இல்லை; அது, எங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி.

ஜென்னி: ஒன்பதாவது வரை படித்துள்ள நான், கானா பாடி வருகிறேன். உற்சாகமான இசை வடிவம், கானா. சில பையன்கள், பெண்களை தவறாக சித்தரித்து கானா பாடுகின்றனர். கானா பாடல் எனில், சமூகத்துக்கு கருத்து சொல்வது போல் இருக்க வேண்டும்; மற்றவர்கள் மனதை கஷ்டப்படுத்துவது போல் இருக்கக் கூடாது.


அம்மு: சுஜி ஷாலு கூட சேர்ந்து தான் எனக்கும், கானா மேல் ஆசை வந்தது. எனக்கு டோலக் கொஞ்சம் வாசிக்க தெரியும். சிலர் பாராட்டவும், சிலர், 'பொம்பள புள்ளை திரியறதைப் பாரு'ன்னு திட்டுவர். ஆனால், அதை காதில் வாங்கி கொள்வதில்லை. கானா பாடும் போது, 'செம பீல்' இருக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement