Advertisement

பக்க வாத்தியம்

'எம்.பி., பதவியையும் 'பதம்' பார்த்திராதீங்க!'

அ.தி.மு.க., பொறுப்பில் இருந்த, தினகரன் ஆதரவாளர்கள், கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர். கோவை, அ.தி.மு.க., - எம்.பி., நாகராஜன், சசிகலா ஆதரவாளர் என்பதால், அவர் வகித்து வந்த, அவை தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்; கட்சியிலிருந்து அவர் நீக்கப்படவில்லை.

வழக்கறிஞர் சங்க உறுப்பினரான இவர், கோவையில் நடந்த பார் அசோசியேஷன் தேர்தலில் ஓட்டு போட, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார். ஓட்டளித்த பின் வெளியே வந்த அவரை, நிருபர்கள் சூழ்ந்து கேள்விகளை கேட்டனர்.

அப்போது, 'பேட்டி எல்லாம் ஒண்ணும் வேண்டாம்; ஆள விடுங்கப்பா' எனக் கூறிய படி நழுவினார். அங்கு நின்றிருந்த, வழக்கறிஞர்கள் சிலர், 'இருக்குற, எம்.பி., பதவியையும் காலி பண்ணிராதீங்கப்பா' என, நிருபர்களை பார்த்து, 'கமென்ட்' அடிக்க, நிருபர்கள் சிரித்தபடி வெளியேறினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement