Advertisement

அறிவியல் ஆயிரம்

சிறியதன் சிறப்பு



மிகவும் எளிமையான செயலைக் குறிக்க பயன்படுத்தப்படும் 'ஜுஜுபி' என்ற வார்த்தை, இலந்தை பழத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல். பழங்களில் எளிமையான பழம், இலந்தைப் பழம். தற்போது சீசனில் வரும் இந்தப் பழத்தை பதப்படுத்தி ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். இலந்தைப்பழத்தில் இருந்து ஜாம், இலந்தை வடை, பொடி தயாரிப்பர். நாட்டு மருத்துவத்தில் இது, பித்தத்தை போக்கும் பழமாக பரிந்துரை செய்யப்படுகிறது. இலந்தை பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் படிக்கும் மாணவர்கள் சாப்பிட வேண்டும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இலந்தைப்பழம் சாப்பிட்டால் எலும்பு வலுப்பெறும்.

தகவல் சுரங்கம்



'பிப்ரவரி புரட்சி'



'புரட்சி' என்பது புரட்டுதல், அடியோடு மாற்றுதல் என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. 1917 பிப்ரவரி 24ல் ரஷ்யாவின் அப்போதைய தலைநகர் பெட்ரோகிராடின் வீதிகளில் திரண்டு ஜார் மன்னருக்கு எதிராக இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . ரஷ்யப் புரட்சிக்கு முன்னோடியான, இது 'பிப்ரவரி புரட்சி' என அழைக்கப்பட்டது. அந்த பெட்ரோ கிராட் தான், தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் எனப்படுகிறது. ஜார் மன்னர், பதவியைத் துறந்து ஓடினார். புதிய அரசு அமைக்கப்பட்டது. இந்த பிப்ரவரி புரட்சி குறித்து பாரதியார் எழுதியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement