Advertisement

அறிவியல் ஆயிரம்

நலம் தரும் 'நாட்டு ரோஜா'



நமது பாரம்பரிய ரோஜாவின் நிறம் பிங்க் எனப்படும் இளஞ்சிவப்பு. பாரம்பரிய ரோஜா என்பதால் தான் இதனை நாட்டு ரோஜா என்பர். வர்த்தக ரீதியாக சிவப்பு ரோஜாக்களே அதிகம் பயன்படுத்தப்படுவதால், நாட்டு ரோஜாக்கள் பயிரிடப்படும் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. வரத்தும் குறைவாக உள்ளது. விலையும் இரு மடங்கு அதிகமாக உள்ளது. ஆயுர்வேதம், நாட்டு மருந்தில் கூறப்படும் மருத்துவக் குணங்கள், நாட்டு ரோஜாவுக்கே உள்ளன. காலப்போக்கில் வர்த்தக மயமாகி விட்ட உலகில் 'நாட்டு ரோஜா' குறைந்து, சிவப்பு ரோஜாக்கள் தான் அதிகம் மலர்கின்றன.


தகவல் சுரங்கம்

மாற்று பாலின சிந்தனைகள்



பாலின சுதந்திரம் உள்ள பிரிட்டனில் பிப்ரவரி 'மாற்றுப் பாலினச் சிந்தை' உள்ளவர்களின் மாதமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் கருப்பு இன மக்களின் வரலாற்று மாதமாகக் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் பிப்ரவரி இதய நல மாதமாக உள்ளது. ரோமானிய கடவுள் பிப்ரஸ் என்பவரின் பெயரில் இருந்து தான் பிப்ரவரி எனப் பெயர் வந்தது. பிப்ரவரி என்பதற்கு லத்தீன் மொழியில் சுத்தப்படுத்துதல் என அர்த்தம். பிப்., 15ல், ரோமில் சுத்தப்படுத்தும் நிகழ்வைக் கொண்டாடுவர். இதற்கு பெப்ரா என்று பெயர். இந்தச் சொல்லில் இருந்து தான் பிப்ரவரி என்ற சொல் வந்ததாகக் கூறுவர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement