Advertisement

சென்னை வீக்எண்ட் கிளிக்கர்ஸ் புகைப்பட கண்காட்சி


சென்னை வீக்எண்ட் கிளிக்கர்ஸ் புகைப்பட கண்காட்சி

புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் ஒவ்வொரு ஊரிலும் வாரக்கடைசி மற்றும் விடுமுறை நாட்களில் ஒன்றாக சேர்ந்து ஏதாவது ஒரு இடத்தை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பது ஒவ்வொரு ஊரிலுமே இருந்துவரும் நல்ல விஷயம்.

சென்னையிலும் சென்னை வீக்எண்ட் கிளிக்கர்ஸ் என்ற அமைப்பு அப்படி கடந்த 8வருடமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை மட்டுமின்றி இந்தியா முழுவதும் கூட சென்று படம் எடுத்து வருகின்றனர்.

1000க்கும் அதிகமான உறுப்பினர்கள்,600க்கும் அதிகமான போட்டோ வாக்,
2 ஆயிரத்திற்கும் அதிகமான கலந்தாலோசனைகள் என்று அமைப்பு மிக ஆரோக்கியமாக இருந்து வருகிறது.

உறுப்பினர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக அவர்கள் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு தற்போது சென்னை லலித்கலா அகாடமியில் புகைப்பட கண்காட்சி நடத்திவருகின்றனர்.இது எட்டாவது ஆண்டின் புகைப்படக்கண்காட்சியாகும்.

நாளையுடன் (30/01/2018)நிறைவு பெறும் இந்த கண்காட்சியினை
காணத் தவறாதீர்கள்,கூடுதல் விவரத்திற்கு chennaiweekendclikers.com என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.

--எல்.முருகராஜ்
-murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement