Advertisement

திருமலையில் களைகட்டிய ஒரு நாள் பிரம்மோற்சவம்


திருமலையில் களைகட்டிய ஒரு நாள் பிரம்மோற்சவம்

திருமலை திருப்பதி என்றாலே அங்கு ஓன்பது நாட்கள் நடைபெறு பிரம்மாண்டமான விழாவான பிரம்மோற்சவ விழாதான் அனைவருக்கும் நினைவிற்கு வரும்.

ஒன்பது நாட்களிலும் மூலவரான திருப்பதி சீனிவாசப்பெருமாள் உற்சவர் மலையப்பசுவாமியாக மாறி பெரிய சேஷ வாகனம்,சின்ன சேஷ வாகனம்,ஹனுமந்த வாகனம்,சர்வபூபாள வாகனம்,கற்பகவிருட்ச வாகனம்,கரூட வாகனம்,சூரிய பிரபை வாகனம்,சந்திர பிரபை வாகனம் போன்ற விதவிதமான வாகனங்களில் மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இந்த ஒன்பது நாள் வலம்வரும் வாகனங்களை ஒரே நாளில் வலம் வரச்செய்து அதில் சுவாமி விதம் விதமான அலங்காரத்தில் எழுந்தருளி வருவதே ரதசப்தமி திருவிழாவாகும்.

நேற்று அதிகாலை ஆரம்பித்து இரவு வரை நடைபெற்ற ரதசப்தமி எனும் இந்த ஒரு நாள் பிரம்மோற்சவ விழாவினைக் காண பக்தர்கள் திரளாக வந்திருந்தனர்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement