Advertisement

லைட் பெயிண்டிங் போட்டோகிராபி

லைட் பெயிண்டிங் போட்டோகிராபியில் அசத்தும் ராஜசேகர்.

ராஜசேகர்

அமெரிக்காவில் வசித்து வரும் ஒரு தீவிர கலை ஆர்வமிக்க புகைப்பட கலைஞர்.

தன் புகைப்படங்களில் தனித்துவம் இருக்க வேண்டுமென்ற எண்ணமிக்கவர். அதன் விளைவாக "லைட் பைண்டிங் போட்டோகிராபி" என்ற முறையின் மீது ஆர்வம் ஏற்பட்டு, அம்முறையை கார்கள் மற்றும் உருவப்படங்களில் பிரயோகிக்க தொடங்கினார்.

"லைட் பெயிண்டிங் போட்டோகிராபி" முறை என்பது கேமராவின் ஷட்டர் சில வினாடிகள் வரை திறந்த நிலையில் இருக்க புகைப்பட கலைஞர் LED லைட் போன்ற கருவியை தன் கைகளில் சுமந்து தேவையான இடங்களில் தேவையான கால அளவுக்கு பெயிண்டிங் செய்வது போல அசைத்து காட்டலாம். இதன் மூலம் கார் போன்ற பெரிய பொருள்களை சிறு பகுதிகளாக படம் பிடித்து, பின்னர் Photoshop மூலம் ஒன்றாக இணைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதன் சிறப்பம்சம் என்னவென்றால், இம்முறையில் எடுக்கப்படும் கார் படங்கள், மற்றும் உருவப்படங்கள் விலையுயர்ந்த ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை தரும். அது மட்டுமின்றி இம்முறையில் வெளிச்சம் அமையும் இடங்கள் புகைப்படக்காரரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால், புகைப்படங்கள் கலைநயமிக்கதாகவும், அழகு மிகுந்ததாகவும் அமையும்.

ஆனால் இம்முறையில் எடுப்பது ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும்,படம் எடுக்கும் போது தெரு விளக்குகள், வாகனங்களின் விளக்குகள் இல்லாத ஒரு இருள் சூழ்ந்த பகுதி தேவைப்படும். அடுத்தது, வெளிச்சத்தின் கால அளவு புகைப்படக்காரரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால், வெளிச்ச அளவு என்பது எதிர்பார்த்த அளவில் அமைவது சிரமம். இதற்கு பலமுறை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். நேரமும், விடாமுயற்சியும் மிக அவசியம்.

இதே போல உருவப்படங்கள்(portrait) எடுக்கும் போது போஸ் கொடுப்பவர் சில வினாடிகளுக்கு அசைவின்றி அமர்ந்திருக்க வேண்டும். இல்லையெனில், புகைப்படங்கள் தெளிவில்லாமல் போய்விடும். இந்த சிரமம் போகப்போக பழகிவிடும்.இம்முறையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் கலைநயத்தோடும், கண்களுக்கு விருந்தாகவும் அமைவதை பார்க்கும்போது படம் எடுக்கும் போது ஏற்ப்படும் சிரமம் மறைந்து போகும்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement