Advertisement

சிலம்பில் சிலிர்ப்பை ஏற்படுத்திய சிறுமிகள்

சிலம்பில் சிலிர்ப்பை ஏற்படுத்திய சிறுமிகள்...

இப்போதெல்லாம் பொங்கல் விழா என்றால் தியேட்டரில் போய் சினிமா பார்ப்பது, டிக்கெட் கிடைக்காவிட்டால் டி.வி.,யில் முடங்கிக்கிடப்பதும் என்றாகிவிட்டது.

இதில் சென்னையை அடுத்துள்ள ஆவடியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொதுநலச்சங்கத்தினர் தமிழர் பண்பாட்டை போற்றும் விதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர்.

அதில் சிலம்பமும் ஒன்று

சிறுமிகள் பலர் கலந்து கொண்டனர்.சீருடை,காலில் ஷூ அணிந்து மிக நேர்த்தியாக சிலம்பு சுற்றினர், எரியும் கம்பில் இவர்கள் சிலம்பம் விளையாடியதை பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது.சிலம்பம் மற்றும் இல்லாமல் மான்கொம்பு, சுருள், களரி உள்ளீட்ட பல்வேறு சாகசங்களை நிகழ்த்திகாட்டினர்.

நிகழ்ச்சியின் முடிவில் இவர்களின் மாஸ்டரான சிலம்பம் ரவியிடம் பேச்சு கொடுத்த போது நிறைய விஷயங்கள் சொன்னார்.

சிலம்பம் கற்றுக்கொண்டால் ஆரோக்கியமான சுறுசுறுப்பான உறுதியான உடலைப்பெறலாம் என்பதுடன் தன்னம்பிக்கையுைம் ஏற்படும்.உங்களை தற்காத்துக் கொள்ளலாம்,இதைக்கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நோய் நொடியின்றி வாழலாம்.

வெறும் சிலம்பம் மட்டுமில்லாமல் களரி சுருள் மான்கொம்பு உள்ளீட்ட பல்வேறு விதமான சிலம்ப விளையாட்டுகளை முறைப்படுத்தி கற்றுத்தருகிறோம்,இதுவரை நாலாயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர்க்கு சிலம்பம் கற்றுக்கொடுத்துள்ளோம்.


இது தமிழரின் வீர விளையாட்டு ஆனாலும் இதன் அருமை தெரியாமல் இருக்கின்றனர், மலேசியா இதன் பெருமையை உணர்ந்து நாட்டின் தேசிய விளையாட்டாக நடத்திவருகிறது.

இந்த விளையாட்டிற்கு இன்னும் மதிப்பை கூட்டும் விதத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பல நிகழ்வினை நடத்திவருகிறோம்.

மத்திய அரசு ஊழியரான கே.ரவி சிலம்பத்தின் மீதான பற்று காரணமாக தன் பெயரையே சிலம்பம் ரவியாக்கிக் கொண்டுள்ளார்.சிலம்பம் பற்றி இவரிடம் பேசுவதற்கான எண்:9003093541.

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ரத்தினம் - Muscat,ஓமன்

    பாராட்டுக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement