Advertisement

சாதிகள் இருக்குதடி பாப்பா...

சாதிகள் இருக்குதடி பாப்பா...

உடுமலை கவுசல்யா
கடந்த பத்தொன்பது மாதங்களுக்கு முன்பாக உடுமலையில் நடந்த ஆணவப்படுகொலையின் காரணமாக இருபது வயது நிரம்புவதற்குள் கணவரை இழந்தவர்.

தன் மனதிற்கு பிடித்த ஆணுடன் குடும்பம் நடத்திய குற்றத்திற்காக, திருமணமான எட்டாவது மாதமே பட்டப்பகலில் கூலிப்படையினரால் கண் எதிரே கணவன் சங்கரை வீச்சரிவாளுக்கும் வெட்டுக்கத்திக்கும் பலிகொடுத்தவர்.சிசிடிவி புட்டேஜ் காரணமாக இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட காரணமாக இருந்தவர்.

சம்பவத்தில் கவுசல்யாவும் தலையில் வெட்டுக்காயத்துடன் பாதிக்கப்பட்டார்,தீவிர சிகிச்சை காரணமாக பிழைத்துக் கொண்டார்,சிகிச்சைக்கு பின் கணவரோடு வாழ்ந்த வீட்டிற்கே திரும்பியவர்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் அரசும் வழங்கிய அனைத்து நிதியையும் கணவர் குடும்பத்திற்கே செலவழித்தார்.கழிப்பறை கூட இல்லாமல் குடிசை வீட்டில் வாழ்ந்தவர்களுக்கு கழிப்றையோடு கூடிய சிறிய வீடு கட்டித்தர உதவினார்.

அன்றாடம் மற்றும் அவ்வப்போது சந்தித்தவர்களில் உண்மையிலேயே தன் மீது அக்கறை கொண்டவர்கள் யார் யார் என அடையாளம் கண்டு கொண்டார், அவர்களில் முக்கியமானவர்கள் சென்னையைச் சேர்ந்த இளங்கோவன்-கீதா தம்பதியினர்.
இவர்களது வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்து தகுதி அடிப்படையில் தற்போது குமாஸ்தா வேலை பார்த்து வருகிறார்.வேலை காரணமாக வெளியூர் விடுதியில் இருக்கிறார்.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கணவர் வீட்டிற்கு சென்று கணவர் குடும்பத்தாரோடு நேரத்தை செலவழித்து வருகிறார்.

இவை எல்லாவற்றையும் விட மனிதர்களை கீழ்த்தரமாக்கி, தன் வாழ்க்கை சீரழித்த சாதியை ஒழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளார், இதற்கான சமூக களங்களில் ஒரு போாரளியாக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார், தனக்கு ஏற்ப்பட்ட நிலமை இனி எந்தப் பெண்ணிற்கும் நேரக்கூடாது என்பதற்க்காகவும் சாதி ஆணவப்படுகொலையில் ஈடுபடுவோர் இனியாவது திருந்த வேண்டும் என்பதற்காகவும் மேடைகள் கண்டுவருகிறார்.பல்சர் ஒட்டுகிறார், பறை இசைக்கிறார், மனதில் இருப்பதை தைரியமாக பேசுகிறார்.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.இந்நிலையில் சென்னையில் 'ஜாதிகள் இருக்கேயடி பாப்பா' என்ற ஆவணப்பட வெளியீட்டு விழாவில் கவுசல்யா கலந்து கொண்டார்.

தலை முதல் உடை வரையிலான இவரது தோற்றம் மாறியிருக்கிறது எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கிறது ,பெரியாரிடம் இருந்தும் அம்பேத்காரிடம் இருந்தும் கற்ற பெற்ற விஷயங்களை மேற்கொள்காட்டி பேசத்தெரிந்து இருக்கிறது.
சிறுவர் சிறுமிகளுடன் கவுசல்யா உரையாடுவதுதான் ஆவணப்படத்தின் கரு.இதில் பங்கேற்ற சிறுவர்களுக்கு காதல் பற்றி ,சாதி பற்றி என்ன புரிதல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த ஆவணப்படம் உதவுகிறது.

இனிமேல் காதலிக்கிறதுக்கு முன்னாடி நீ என்ன சாதின்னு கேட்டுதான் காதலிக்கணுமா? பயமிருக்குக்கா?என்ற கேள்விக்கு அப்படி கேட்டு காதலிப்பது காதல் இல்லை, காதலிப்பது மனசாக மட்டுமே இருக்கவேண்டும் என்று பதில் தருகிறார் கவுசல்யா.
இந்த ஆவணப்படத்தை யூடியூப்பில் பதிவேற்றும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது ஆகவே அதில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு அழைத்த எம்.ஜே.பிரபாகருக்கும்,கூடுதல் விவரங்கள் தந்து உதவிய இளங்கோவன்-கீதா தம்பதியினருக்கும் நன்றி!

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • krishna - cbe,இந்தியா

  ஜாதி ஒழிப்பு போராளிகள் ஏன் அரசாங்க சலுகைகள் மற்றும் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடுகளை ஆதரிக்கின்றனர் .அதிலும் ஜாதியை ஒழிக்க வேண்டியது தானே.திறமை இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரலாமே.

 • Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா

  சாதி மறுப்பு , சாதி ஊழிப்பு என்பவற்றை திராவிட காட்சிகள் குறிப்பாக கருணாவின் தி மு க 'பார்ப்பனரை ஒதுக்கி அவர்களை அவமானப்படுத்தி, தமிழ் நாட்டில் இருந்து பலரை [ அவர்கள் பெருபாலும் தமிழ் பேசுபவர்கள் எங்கு இருந்தாலும் ] விரட்டவே பயன்படுத்தினர். ஆனால் உண்மையில் ' ஜாதி கொடுமைகள் ,ஜாதகி பற்றி சிறு குழந்தையொகள் யஹீரிந்து இருப்பது ,ஒரே சாதியில் பல பிரிவுகளை மிகைப்படுத்தி தேர்தலில் வாக்கு பெற்று அதன் மூலம் 'தாங்கள் தமிழகத்தை கொள்ளை அடித்து தானும் தன்னை சார்ந்த குடுபங்களும் பல தலைமுறைகளுக்கு கோடி கோடி யாக சேர்ப்பதற்கும் மட்டும் உபயோகித்து ' ஜாதி கொடுமைகள் மேல் நோக்க செத்தனர்' இன்று தமிழகத்தில் இருப்பதுபோன்ற 'ஜாதி பைத்தியம் வேறு மாகாணத்தில் இல்லை

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  பார்ப்பனர்களை தவிர மற்ற எல்லா ஜாதிகளும் தான் பிரச்சினை செய்கின்றன . ஆணவ கொலைகள் பார்ப்பனர்கள் செய்யவில்லை அதனையும் பார்ப்பனர் அல்லாதவர் தான் அவர்களுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி பார்த்து இந்த முறை கேடான கொலைகளை செய்கிறார்கள் . ஆனால் பார்ப்பானை திட்டுவதில் இந்த பொறுக்கிகளுக்கு ஏக மகிழ்ச்சி

 • pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா

  சின்னத்தனமான சினிமாக்களால்தான், இந்த சமூகம், சீரழிகிறது. சின்ன பட்ஜெட் படம், சின்னப்படம் என பெயர் சூட்டி காவியம் எடுப்பது போல் பிய்ல்ட்-உப் செய்து, காசு பார்க்கிறார்கள், அது நமது கலாச்சாரத்தையும் சின்னா-பின்னாமாக்குகிறது. இவரின் நடத்தையால் சமுதாயத்துக்கு கிடைத்த பாடம் என்ன?. இவர் அக்கறை எடுக்கும் சாதியினர் இனி இலவசம், இட-ஒதிக்கீடு வேண்டாம் என சூளுரை எடுப்பார்களா? சம்பாத்திக்கும் பணத்தை டாஸ்-மாக் குக்கு கொடுக்காமல் இருந்தாலே கக்கூஸ் என்ன கட்டடமே கட்டி இருக்கலாம். இவரின் பெற்றோர் இவரை ஏன் பெற்றோம் என வெந்துயர் அனுபவிக்க மாட்டார்களா? தாய்க்கும் தூக்கு தண்டனை வாங்கி தருவேன் என சொல்லும் பெண் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமா ? இவரை போல மற்ற பெண்களும் நடந்து கொண்டால், இவரை இப்பொழுது ஆதரிக்கும் கீதா போன்றோர் பிந்நாளிலிலும் ஆதரிப்பார்களா? தன பெற்றோர்களை கொன்று கிடைக்கும் பேரும் புகழும் தமிழ் சமுதாயத்துக்கு ஏட்புடையதா? அல்லது இதைத்தான் இவர் படித்தாரா? இது போன்ற படிப்பிலக்கணம் தமிழ்நாட்டுக்கு சரியா?. தவறான வழிகாட்டுதல்கள் நடக்கின்றன. "உன்னை அறிந்தால், ஒரு பெண் தன்னை அறிந்தால் , உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் . தாழ்ந்தாலும், தலை வணங்காமல் அவள் வாழலாம்.இன்று குமாஸ்தா, வேலை வாகியாகி விட்டது, அடுத்தது, மறுமணம். அவருக்கும் அரசு வேலை. இருவருக்கும் அரசு சம்பளம். ஏகபோக வசதிகளுடன் வாழ்க்கை, சாகும் வரை பென்ஷன், குழந்தைகளுக்கு இட-ஒதிக்கீட்டில் மீண்டும் அவர்களுக்கும் அரசு வேலை. இன்று பெருமிதத்துடன் என் கணவர் சங்கர் என கூறும் இவர், அவரின் மரணத்தால் வேலை வாங்கிய இவர்,அவரின் நினைவால்,நினைவாக, இனி மேல் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என இதே மேடையில் சூளுரைத்து இருந்தால், தமிழச்சியின் இலக்கணம் காத்தவர் எனலாம். வாயில் எலும்பில்லாத நாக்கு இருக்கும் வரை வாழ்க்கையில் நடக்கும் எதுவும் சரியே,எனப்படும். ஆனால் மனதின் மனச்சாட்சி இருந்தால் தான், மானம் மட்டும்தான் வாழ்க்கை என மனம் பண்படும். தமிழரின் பண்பாடு தெரிந்தவர்கள் அல்லர் இவர்கள். பண்பாடு பேசினால் பசியாரது என்போர் பண்பாட்டுடன் நடந்திருந்தால்,இந்நிலை வந்திருக்காது.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  இங்கே நான் அவ்வப்போது இந்தியர்களை ,தமிழர்களை சந்திப்பேன் ..அவர்கள் தமிழர்கள் என்றால் ,தமிழில் பேசுவது தான் முறையாக இருக்கும் என்று பேசுவேன்.,,அவர்கள் என்ன ஜாதி என்று அவர்களும் கேட்பதில்லை .நானும் கேட்பதில்லை ..இந்த ஜாதியாக இருக்குமோ என்று சிந்திப்பதும் இல்லை ,,சில நேரங்களில் ஜாதி பேச்சு இன்னும் தொடர்ந்தால் அது காண்பிய்து விடும். அதற்காக அவர்களுக்கு தனிதத்துவமும் கொடுப்பதில்லை .வெளிநாடுகள் வந்தால் ,...கருப்பு ,வெள்ளை என்று மணமுடித்து கொள்கிறார்கள் .வெள்ளையர்களை தான்அதிமகாக விரும்புகிறார்கள் என்பதும் உண்மை தான் ..இரண்டு பேரின் மனமும் குணமும் ஒத்து போனால் யாரும் தடை போடுவதுசரியாக இருக்காது திருமணத்திற்கு பின் ,அதில் வரும் ஏற்ற தாழ்வுகளுக்கு அவர்கள் தான் பொறுப்பு என்ற எண்ணம் வர வேண்டும். ...திருமணத்திற்கு பின்,தம் குடும்பத்தை அவர்களின் சமூகம் கேவலமாக பார்க்கும் என்ற எண்ணம் தானே அதற்க்கு காரணம் ...அதே சமுதாயம் நீங்கள் பிச்சைக்காரர்களாக வாழ்ந்தாலும் கண்டு கொள்ளாதது என்பதும் உண்மை ......வெளிநாடுகளில் சென்ற ஆண் மக்கள் ,வெள்ளை பெண்ணை கூட்டி வந்து ஜாம் ஜாம் என்று வூர் கூடி திருமணம் செய்கிறார்களே ..வெள்ளையரும் வேறு ஜாதி தானே ...கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி இன்னும் காட்டு மிராண்டி தான் என்று நிரூபித்து கொண்டிருக்கிறார்ன் .,,,ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு ,,,கொலை வெறியால் ...குற்றத்திற்கு உள்ளவர்கள் மரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது தான் எனது நம்பிக்கை .அந்த பெண்ணின் முகத்தில் புன்னகையை பார்க்க முடிகிறது ..நல்ல விஷயம் ..முடிந்தால் ...அவர் கணவனின் ஜாதியிலிருந்தே ஒருவரை மறுமணம் செய்து கொள்ளலாம் .

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  மனிதர்களை கீழ்த்தரமாக்கி மிருகங்களாக திரியும் ஜாதி வெறியர்களும், காவிகளும் கருத்து வாந்தி எடுத்து நாறடிக்க வந்து விட்டார்கள். ஆணவ கொலையை கண்டிக்க துப்பில்லாத புல்லர்கள்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  காதலித்து மணந்தவர்கள் எல்லோருமே சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. காதல் எதையுமே பார்த்து வருவதில்லை என்றால் பாதி காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவது ஏன்? தோல்வியில் முடிந்தபின்பும் காதல் நீடிக்கிறதா? இல்லையென்றால் அது என்ன காதல்? அதற்காக இப்படி கொடூரமாக பிரிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் காதல் தோல்வியடைந்தால் அந்த பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க பெற்றோரைத்தவிர யார் இருக்கிறார்கள்? அப்படி இருக்கும்போது காதலித்தாலும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் என்பது ஒரு பாதுகாப்பை தராதா?

 • TechT - Bangalore,இந்தியா

  சிறுவர் சிறுமியரிடம் காதல் பற்றி உரையாடல் எதற்கு?, வயது 18 முடிந்தவர்கள் மட்டுமே பேசவேண்டும். பிஞ்சில் பழுக்க வைக்காதீர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement