Advertisement

இயற்கை உலகம் மகரந்தம் சுமக்கும் பூச்சிகள்!

தேனீ உள்ளிட்ட பல பறக்கும் பூச்சி இனங்கள், மலர்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவு
கின்றன. உலகிலுள்ள, 75 சதவீத தாவரங்களின் இனப் பெருக்கத்திற்கு, இத்தகைய அயல்
மகரந்த சேர்க்கையையே நம்பியுள்ளன.
சரி, மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள் எப்படி குறிப்பிட்ட மலர்களை அடையாளம் கண்டு, அதன் மீது சென்று அமர்கின்றன... இது குறித்து, சுவீடனின் உப்சாலா பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், பெங்களூரிலுள்ள தேசிய உயிரியல் அறிவியல் மையத்தைச் சேர்ந்த
விஞ்ஞானிகளும் ஆய்வு செய்துள்ளனர். பெங்களூரு, சிக்கிம் மற்றும் உப்சாலாவில், பூச்சிகள் எப்படி அயல் மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகின்றன என, அவர்கள் ஆராய்ந்தனர். அதன் அடிப்படையில் பூக்களின் எந்த அம்சங்கள் இப்பூச்சிகளை கவர்கின்றன என்று முதலில் கண்டறிந்தனர். பின், அதே அம்சங்களைக் கொண்ட செயற்கைப் பூக்களை உருவாக்கினர். அப்போதும் பூச்சிகள் அந்த செயற்கை மலர்கள் மீது வந்து அமர்ந்தன.
இதன் மூலம், வடிவம், அளவு, வண்ணம் மற்றும் வாடை ஆகியவற்றின் அடிப்படையில், தேனீ உள்ளிட்ட பூச்சிகள் மலர்களை அடையாளம் காண்கின்றன என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இது குறித்து மேலும் பல ஆய்வுகள் தேவை என்றாலும், இந்த கண்டுபிடிப்பு முக்கியமானது என, தாவரவியல் மற்றும் பூச்சியியல்
விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement