Advertisement

பனி மனிதன் இருப்பது உண்மையா?

இமயமலையை ஒட்டிய திபெத்திலும், நேபாளத்திலும், 'யெடி' எனப்படும் பனி மனிதன் அவ்வப்போது தென்படுவதாக சொல்லப்படுவதுண்டு. இதற்கு ஆதாரமாக அப்
பகுதியில் வசிப்போர், பனி மலையின் சாரலில் தென்படும் பெரிய கால் தடங்களை சுட்டிக் காட்டுவது வழக்கம். இன்னும் சிலர், பனி மனிதனின் மண்டை ஓடு, எலும்புகள் தங்களிடம் இருப்பதாகவும் சொல்வதுண்டு. ஆனால், விஞ்ஞானிகள் அப்படி யாரும் கிடையாது என, மறுத்து வருகின்றனர். அண்மையில் நியூயார்க் நகரிலுள்ள, பபலோ பல்கலைக்
கழக விஞ்ஞானிகள், அத்தகைய எலும்புகளை, டி.என்.ஏ., சோதனைக்கு உட்படுத்திப் பார்த்தனர். அவர்கள் சோதித்த ஒன்பது ஆதாரங்களில் எட்டு ஆதாரங்கள், ஆசியக் கறுப்புக் கரடி, இமாலய பழுப்புக் கரடி அல்லது திபெத்திய பழுப்புக் கரடி ஆகியவற்றின் எலும்புகளே என்று தெரியவந்துள்ளது. மீதி உள்ள ஆதாரம்... அது ஒரு நாயின் எலும்புதானாம்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement