Advertisement

செர்னோபில் சூரிய ஆற்றல் மையமாக மாறும்!

உலகின் மிக மோசமான அணு உலை விபத்து, உக்ரேனிலுள்ள செர்னோபில் அணு உலையில், 1986ல் நிகழ்ந்தது. அதன் பின் அந்த உலை, பாதுகாப்பு கருதி முற்றிலுமாக மூடப்பட்டது. தற்போது, அந்த உலையின் சுற்றுப்புற பகுதியில், ஒரு சூரிய மின் ஆற்றல் மையத்தை திறக்க, இரு நிறுவனங்கள் கூட்டாக முன்வந்துள்ளன.உக்ரேனைச் சேர்ந்த, 'ரோடினா எனர்ஜி குரூப்' மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த, 'எனர்பாக்' நிறுவனமும், செர்னோபில் பகுதியில் சூரிய ஒளியிலிருந்து, 1 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
இதற்கென, 10 லட்சம் யூரோ முதலீட்டையும் அவை செய்யவிருக்கின்றன. இத்திட்டம் வெற்றி பெற்றால், படிப்படியாக விரிவாக்கம் செய்து, 100 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க தேவையான சூரிய மின் பலகைகளை அப்பகுதியில் அமைக்கப் போவதாகவும், இரு நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.'எங்கள் திட்டம் செர்னோபில் உலையிலிருந்து, 100 மீட்டர் தொலைவிலேயே அமைக்கப் போகிறோம். உக்ரேனுக்கு நடுவே ஒரு கருந்துளை போல செர்னோபில் இனி இருக்காது' என, ரோடினாவின் தலைமை அதிகாரி, எவ்ஜினி வரியாஜின் தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement