Advertisement

புது பாட திட்டத்தில் கலாம், நம்மாழ்வார் - 'கூகுள்' சுந்தர் பிச்சைக்கும் இடமுண்டு

தமிழக பள்ளிக்கல்வி யின் புதிய பாடத்திட்டத் தில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், இயற்கை விஞ்ஞானி, நம்மாழ்வார் பற்றிய பாடங்கள் இடம் பெற உள்ளன.

தமிழகத்தில், 14 ஆண்டுகளாக, பள்ளிக்கல்வி பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. 10 ஆண்டுகளில், தொழில்நுட்பம், விவசாயம், அரசு நிர்வாக முறை மற்றும் சர்வதேச அரசியல் என, அனைத்திலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கோரிக்கைஆனால், தற்போதைய பாடத்திட்டம், இன்னும் பழைய முறைகளையே பயிற்றுவிக்கிறது. எனவே, பாடத்திட்டத்தை மாற்ற, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, புதிய பாடத்திட்டம் உருவாக்க, தமிழக அரசின் சார்பில், குழு அமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மேற்பார்வையில், பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் தலைமையில், பாடத்திட்ட பணிகள் நடக்கின்றன.

புதிய பாடத்திட்டம் குறித்து, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதிரி பாடத்திட்ட வரைவு அறிக்கை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், www.tnscert.org இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

அது தொடர்பாக, பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், பாடப் புத்தகம் எழுதும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித் துறை, தனியார் கல்லுாரிகள், பல்கலை பேராசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டு, பாடவாரியாக புத்தகம் எழுதி வருகின்றனர்.

பாடங்களை பொறுத்தவரை, தமிழக பண்பாடு, கலாசாரம் மட்டுமின்றி, அறிவியல், இயற்கை விவசாயம், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி எழுதப்படுகிறது.

அந்த வகையில், இந்தியாவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, சர்வதேச அளவில் புகழ்பெற்று, இளைய தலைமுறையினரிடம் மவுன புரட்சி ஏற்படுத்தியவர்கள் பற்றிய பாடங்கள் எழுதப்படுகின்றன.அதில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் குறித்து பாடம் இடம்பெற உள்ளது.

கலாமின் பள்ளி, கல்லுாரி படிப்பு, இளம் விஞ்ஞானியாக, இந்திய உபகரணங்களை பயன்படுத்தி, அவர் தயாரித்த, எஸ்.எல்.வி., ராக்கெட், அக்னி ஏவுகணை, 'பொக்ரான்' குண்டு வெடிப்பு என, அனைத்து விஞ்ஞான அம்சங்களும், இதில் இடம் பெறும் என, தெரிகிறது.

ஆராய்ச்சிஅதே போல், இயற்கை விஞ்ஞானம், சுற்றுச்சூழல் கெடாமல் மண்வளம் பாதுகாப்பு குறித்து, இயற்கை விஞ்ஞானி, நம்மாழ்வார் மேற்கொண்ட ஆராய்ச்சிகளும் இடம் பெற உள்ளன. தமிழகத்தில் படித்து, சர்வதேச அளவில் புகழ் பெற்ற, 'கூகுள்' தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை பற்றிய தகவல்களும், புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அப்போ மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகிய முஸ்லீம் பிரபலங்கள் பேர் எல்லாம் விட்டுப்போயிருமா????

 • Balan Palaniappan - Chennai,இந்தியா

  நல்ல செய்தி. மாணவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும்.

 • R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா

  இந்த மாதிரி நற்செய்திகளை புத்தகத்தில் வெளியிடுவது வரவேற்க வேண்டும் ...அரசுக்கு நன்றி ...

 • அசோக் வளன் - Chuan Chou,சீனா

  1) தமிழின் தொன்மை தமிழர் பண்பாடு , இந்து சமவெளி நாகரீகத்துடன் தமிழர்களின் தொடர்பு , 3500 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்ந்தார்கள் , கீழடி அகழ்வாராய்ச்சி , உலகத்திலேயே பல ஆண்டுகளாக இன்றுவரை தொடர்ந்து நகரமாக இயங்கி வரும் மதுரை மாநகரம் உலக அதிசயமான தஞ்சை பெரிய கோயில் கல்லணை தமிழ் கடவுளான முருகன் போன்றவைகள் படத்தில் இடம்பெறும் என்று நம்புகிறோம் .... 2) இந்து மதம் உட்பட 7 மதங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது .... 6 மதங்களை ஓன்று சேர்த்து (ஷண்மதம் ) உருவாக்க பட்டதுதான் இந்து மதம் பற்றியும் , ஷண்மத ஸ்னபகர் பற்றியும் , அந்த மதத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன் தான் " இந்து மதம் " என்று பெயரிட்ட வெள்ளையரை பற்றியும் பாடம் இடம்பெறுமா ? இடம்பெற்றால் பல சர்ச்சைகளை எதிர்பார்க்கலாம் ....

 • Saravanan stalin - Kuwait city,குவைத்

  அருமை பிரமாதம்.

 • அசோக் வளன் - Chuan Chou,சீனா

  இயற்கை விஞ்ஞானி, கோ நம்மாழ்வார் அவர்களை பற்றியும் அவரது சாதனைகளையும் இளம் சமுதாயத்தினர் படித்தால் பல மாற்றங்களை நாம் விரைவில் காண முடியும் ....வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement