Advertisement

அக்கம் பக்கம்

இவ்வளவு அவமானமா?


பா.ஜ., மேலிடத்தில் இருந்து, கேள்வி மீது கேள்வி கேட்டு துளைத்தெடுப்பதால், நொந்து போயுள்ளார், ம.பி., முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான். சமீபத்தில், சித்திரகூட் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட தோல்வி தான் இதற்கு காரணம்.
இந்த தொகுதி, ஏற்கனவே காங்கிரஸ் வசம் இருந்தது தான் என்றாலும், பா.ஜ., ஆளுங்கட்சியாக இருப்பதால், 'எப்படியாவது வெற்றி பெற வேண்டும்' என, டில்லி யில் உள்ள கட்சி மேலிடம், கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது.

சிவ்ராஜ் சிங் சவுகானும், தன் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி, தீவிர பிரசாரம் செய்தார். மூன்று நாட்கள் தொகுதியில் முகாமிட்ட அவர், 12க்கும் மேற்பட்ட பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.

இவ்வளவு நடந்தும், தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டது. அதுவும், கடந்த தேர்தலை விட, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை சற்றும் எதிர்பாராத சிவ்ராஜ் சிங் சவுகான், ஆடிப் போய் விட்டார். கட்சி மேலிட தலைவர்களோ, 'ஆளுங்கட்சியாக இருந்து என்ன பயன்; ஒரே ஒரு தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லையே; உங்களுக்கு எதற்கு பதவி...' என்ற ரீதியில், குடைந்து எடுத்து விட்டனர்.வெறுத்த சிவ்ராஜ் சிங் சவுகான், 'பதவி சுகத்துக்காக, எவ்வளவு அவமானத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது...' என, புலம்புகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement