Advertisement

பக்க வாத்தியம்

தமிழ்த்தாய் வாழ்த்தில் சொதப்பிய அதிகாரிகள்!


மதுரை, தல்லாகுளம் தலைமை தபால் நிலையத்தில், சர்வதேச தபால் தனி பிரிவு துவக்க விழா
நடந்தது. தபால் துறை, தென் மண்டல தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக, 'அச்சமில்லை... அச்சமில்லை... அச்சமென்பதில்லையே...' என்ற பாடலை தவறுதலாக, மைக் ஆப்பரேட்டர் ஒலிபரப்பினார்.
நொந்த தென் மண்டல தலைவர், 'தமிழ்த் தாய் வாழ்த்து இல்லையென்றால் பரவாயில்லை; நாமே பாடுவோம்' என்றார்.
அதேபோல, விழா இறுதியில் தேசிய கீதத்திலும், ஒலிப்பெருக்கி, 'மக்கர்' செய்தது. தென் மண்டல தலைவர், 'நிறுத்த சொல்லுங்கள்; நாமே பாடிக்
கொள்ளலாம்' என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், 'நல்ல வேளை... நேத்து ராத்திரி யம்மா...ன்னு ஏடாகூடமான பாட்டு எதையாவது, ஒலிபரப்பாம விட்டாங்களேன்னு
சந்தோஷப்படுங்க...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement