Advertisement

அறிவியல் ஆயிரம்

குளிர்கால கம்பளி விற்பனை

வட மாநிலங்களில், கடுங்குளிர் துவங்கி விட்டது. வட மாநில நகரங்களில், குளிர்கால கம்பளி
ஆடைகளுக்கென சிறப்பு மேளாக்கள் நடத்தப்படும். உலகின் மொத்த கம்பளி உற்பத்தியில், நம்
இந்தியாவின் பங்கு 2 சதவீதம். இந்த 2 சதவீதமும் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பெருமளவில்
உற்பத்தியாகிறது. ராஜஸ்தானில் எல்லைப்புற நகரான ஜெய்ஷல்மாரில் உள்ள பாலைவனப் பகுதிகளில், வளரும் ஆடுகள் கம்பளி உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுகின்றன. திபெத்திய அகதிகளின் வாழ்க்கை ஆதாரமாக கம்பளி விற்பனையே உள்ளது.


தகவல் சுரங்கம்




அரசியலில் 'டிசம்பர்'

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசியலில் வக்கீல்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.
பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ் நீதிபதிகளே இருந்தனர். அவர்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக நீதிமன்றங்களுக்கு கிறிஸ்துமஸ் முதல், புத்தாண்டு வரை விடுமுறை விடும் வழக்கம் தோன்றியது. நீதிமன்ற விடுமுறையில் இந்திய வக்கீல்களுக்கும் பணிச்சுமை இருக்காது. எனவே தான் காங்., மாநாடுகள், டிசம்பர் இறுதி வாரத்தில் நடைபெறும் வழக்கம் தோன்றியது. எனவே காங்., மாநாடுகளை, 'டிசம்பர் மாநாடு' என்றும் கூறுவர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement