Advertisement

'டவுட்' தனபாலு

வி.சி., தலைவர் திருமாவளவன்: தி.மு.க.,வுக்கு நாங்கள் ஆதரவு அளித்திருப்பதை, ராமதாசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வரும் காலத்தில், ஸ்டாலின் முதல்வராகி விடுவாரோ என்ற வயிற்றெரிச்சலில் ராமதாஸ் உள்ளார்.
டவுட் தனபாலு: உங்களின் ஆதரவு இருந்தால் தான், ஸ்டாலினால் முதல்வராக முடியும்னு சொல்லிக் காட்டுறீங்களா... ராமதாசின் வயிற்றில் உள்ள எரிச்சலை எல்லாம் கண்டுபிடித்துச் சொல்லும் நீங்க, உங்க மனசுல பூத்த, ஆட்சியில் பங்கு என்ற ஆசை, இப்போ எந்த நிலையில் இருக்கு என்பதையும், ஸ்டாலின் முதல்வரானால் அது சாத்தியமாகுமா என்ற
சந்தேகத்தையும் விளக்கினாத் தேவலை...!

தி.மு.க., -- எம்.பி., கனிமொழி: மக்கள் விரோத அரசை அகற்ற, தொகுதி மக்கள் தயாராகி விட்டனர். ஆர்.கே.நகரில், பணப் பட்டு வாடாவை தடுக்க, தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: எந்த கருத்தையும், உதாரணத்தோடு சொல்வது தானே, உங்க கட்சி வழக்கம்... இதை மட்டும் ஏன், பொத்தாம்பொதுவாய்ச் சொல்றீங்க... 'திருமங்கலம் இடைத்தேர்தலில் எந்த அளவுக்கு கண்காணிப்பு இருந்ததோ, அதே நடவடிக்கையை, ஆர்.கே.நகரில் தேர்தல் கமிஷன் கடைபிடிக்கணும்'னு, ஒரு வார்த்தை சொன்னால் என்னங்கறது தான், என்னோட, 'டவுட்!'

தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி மீது குறைகள் சொல்லியபடி தான் இருப்பர். ஆட்சி நன்றாக இருக்கிறது என, எந்தக் காலத்திலும் எதிர்க்கட்சிகள் சொன்னது கிடையாது.
டவுட் தனபாலு:
இது, உங்க கட்சிக்கும் பொருந்தும் தானே... ஆனா, உங்களோட ரெண்டு அணிகளும் இணையும் முன், போகுற இடங்களில் எல்லாம், தமிழக அரசு குறித்து பன்னீர்செல்வம் குறை சொல்லி வந்தாரே... அதற்கும், உள்நோக்கம் தான் காரணமா... அப்படீன்னா, அவரது மனசுல என்ன இருந்துச்சு என்ற, 'டவுட்'டை விளக்குங்களேன்...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement