Advertisement

அக்கம் பக்கம்

ஓயாத அக்கப்போர்!


தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ,ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ் மீது, கடும் கோபத்தில் இருக்கிறார், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான, சந்திரபாபு நாயுடு. இவர்கள் இருவருக்கும், ஏற்கனவே வாய்க்கால் தகராறு உள்ளது. எந்த செயலையுமே, இருவரும் ஏட்டிக்கு போட்டியாக செய்வது வழக்கம்.


சமீபத்தில், தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில், சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடந்தது. இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள், இவாங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், தங்கள் கட்சி இடம் பெற்றுள்ளதால், இந்த மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருந்தார், சந்திரபாபு நாயுடு. ஆனால், சந்திரசேகர ராவ், இதை விரும்பவில்லை. இதனால், சந்திரபாபு நாயுடுவுக்கு, அழைப்பிதழ் கூட அனுப்பாமல் புறக்கணித்து விட்டார், சந்திரசேகர ராவ். இதையறிந்த சந்திரபாபு, கொதித்து எழுந்தார்.


'ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும், 10 ஆண்டுகளுக்கு, ஐதராபாத், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகர் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படியிருக்கும் போது, ஐதராபாதுக்கு வருவதற்கு, எனக்கு தடை விதிக்க, சந்திர சேகர ராவுக்கு என்ன அருகதை உள்ளது...' என, புலம்பி தீர்த்தார், நாயுடு.


வேறு வழியில்லாமல், போனால் போகிறது என, சந்திரபாபு நாயுடுவின் மருமகளும், தொழில் அதிபருமான, பிராமணிக்கு, அழைப்பிதழை அனுப்பி வைத்தார், சந்திரசேகர ராவ்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement