Advertisement

பக்க வாத்தியம்

திராவிட கட்சிகளுக்கு சமர்ப்பணம்!


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி எய்ம்ஸ் மெட்ரிக் பள்ளியில், குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட நீதிபதி, மகிழேந்தி பேசும் போது, 'நம் நாட்டில், குழந்தை திருமணங்களில், தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும், தமிழகத்தில், 400 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
'இருப்பினும், பல குழந்தைகளின் திருமணங்கள், தெரியாமலேயே நடந்திருக்கலாம். குழந்தை திருமணங்களால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, நாட்டின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது' என்றார்.


பார்வையாளர்களில் ஒருவர், 'தமிழகத்தை, 50 ஆண்டுகளா ஆண்டுட்டு இருக்குற திராவிட கட்சி
களுக்கு தான், இந்த பெருமை போய் சேரும்...' என, வஞ்ச புகழ்ச்சியாக கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement