Advertisement

சொல்கிறார்கள்

வார்த்தைகளில்விவரிக்க முடியாது!

தாய்ப்பாலை பதப்படுத்தி, கிரியேட்டிவிட்டியுடன், அழகிய ஆபரணம், உருவங்களை, தாய்மைக்குரிய மரியாதையுடன் செய்து தரும், சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ப்ரீத்தி: எனக்கு சிறு வயது முதலே நுண்கலைகளில் ஆர்வம். கிராப்ட் வகுப்புகள் எதற்கும் சென்றதில்லை.
ஆனாலும், மெழுகு, களிமண் போன்றவற்றில் சின்னச் சின்ன உருவங்கள் செய்வது, 'ஹேண்ட் மேடு' போட்டோ பிரேம்கள் செய்வது என, ஒவ்வொன்றாகச் செய்து பார்த்து, பிழைகளை திருத்தித் திருத்தியே கற்றுக் கொண்டேன்.

என் கைவினைப் பொருட்களின் விற்பனைக்காக, முகநுாலில் ஒரு பக்கம் ஆரம்பித்தேன்.
அங்கு கிடைத்த வாடிக்கையாளர்களின் பாராட்டுகளே, என்னை புதிய முயற்சிகளுக்கு ஊக்குவித்தன. அப்படி ஒருவர் தந்த யோசனை தான், இந்த தாய்ப்பால் ஆபரணங்கள்.தாய்ப்பாலில் ஆபரணங்கள், நினைவுப்பொருட்கள் செய்யும் பழக்கம், வெகுநாட்களாகவே பல நாடுகளில் இருந்து வருகிறது. அது பற்றி இணையதளத்தில் பெற்ற குறிப்பு மூலம், நான் அவற்றை செய்ய முயன்றேன். ஆரம்ப காலத்தில் இதற்கான அச்சு இங்கு கிடைக்காததால், அமெரிக்காவுக்கு கணவர் சென்றிருந்த போது, அங்கிருந்து வாங்கி வந்தார்.

தாய்ப்பால் சேகரித்து, அது கெட்டுப் போகாமல் இருக்க, 'ப்ரிசர்வேட்டிவ்' சேர்க்கப்படும். பின் அச்சில் வார்த்து, வாடிக்கையாளர்களுக்கு வடிவங்களாக கொடுப்போம். வடிவம், நிறம், மணம் அனைத்திலும் நேர்த்தியான பார்முலாவை பெற, கிட்டத்தட்ட ஆறு மாத கால முயற்சி தேவைப்பட்டது.ஸ்மைலி, இதயம், உள்ளங்கை, பாதம் என, பல்வேறு வடிவங்களில், தாய்ப்பால் நினைவுப் பொருட்களை உருவாக்கி உள்ளேன்.ஒரு நினைவுப் பொருளுக்கு, 15 மில்லி தாய்ப்பால் போதுமானது. வெளியூர், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனக்கு அதை, 'பேக்' செய்து, அனுப்பி வைப்பர்.

பெண்டன்ட், கம்மல் என ஆபரணமாகவோ, கீ செயின் போன்ற நினைவுப் பொருளாகவோ செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணமாக, 1,000 முதல், 4,000 ரூபாய் வரை வாங்குகிறேன்.
இதுவரை, 75க்கும் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளேன். தாய்ப்பால் நினைவுப் பொருளை தங்கள் கைகளில் பெறும் போது, அந்த அம்மாக்களின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை, வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

'எவ்வளவு விலையுயர்ந்த நகைகள் அணிந்தாலும், இது தருவது போன்ற ஒரு சந்தோஷத்தை வேறெதிலும் உணர்ந்ததில்லை' என, அவர்கள் சொல்லும் போது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இப்படி இன்னும் பலருக்கு அந்த மகிழ்ச்சியை பரிசளிப்பதே நோக்கம்.

தொடர்புக்கு 81974 67047

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement