Advertisement

'டவுட்' தனபாலு

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி: லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல்களைப் போலவே, உ.பி.,யில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும், பா.ஜ.,வினர், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்துள்ளனர்.

டவுட் தனபாலு: ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமா என்பதை நிரூபிக்க, தேர்தல் கமிஷன் பல முறை அழைப்பு விடுத்து, வாய்ப்பும் அளித்தது... அந்த சவாலில் கலந்து கொண்டு, ஏன் நிரூபிக்கலை... அது சரி, இரண்டு மாநகராட்சிகளில் உங்க கட்சி வெற்றி பெற்றிருக்கே... அதுவும், முறைகேட்டால் கிடைத்தது தானா என்பது தான், என்னோட, 'டவுட்!'lll

ஜெ., அண்ணன் மகள் தீபா: ஆர்.கே.நகரில், தேர்தல் நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

டவுட் தனபாலு: கடந்த முறையும் இப்படித்தான் சொன்னீங்க... முறைகேடு நடந்ததை தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டதும், 'விட்டால், வெற்றி பெற்று இருப்பேன்'னு புலம்புனீங்க... மொத்தத்தில், ஆர்.கே.நகரில் நீங்க வெற்றி பெற்றதா அறிவித்தால் மட்டும் தான், தேர்தல் நேர்மையா நடந்ததா ஏற்றுக் கொள்வீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!lll

நடிகர் விஷால்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட முடிவு எடுத்துள்ளேன். 4 தேதி மனு தாக்கல் செய்கிறேன். அதன்பின், மற்ற விபரங்கள் அனைத்தையும் கூறுகிறேன்.
டவுட் தனபாலு: அதான் நீங்க, தினகரனோட பினாமின்னு அம்பலமாகிடுச்சே... அப்புறம் நீங்க என்னத்த சொல்லப் போறீங்க... ஆழம் தெரியாமே காலை விட்டு, அசிங்கப் பட்டுட்டோமேன்னு பின்னால ரொம்ப, 'பீல்' பண்ணுவீங்க... இதுல, யாருக்கும், 'டவுட்'டே இல்லே...!lll

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement