Advertisement

அக்கம் பக்கம்

ரொம்ப படுத்துறாருப்பா...!

காங்கிரஸ், எம்.பி.,யும், கேரளாவைச் சேர்ந்தவருமான, சசி தரூர், அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். 'வாயை கொடுத்து, வாங்கி கட்டுவது' என்பரே... அது, நம்ம சசி சேட்டனுக்கு, 100 சதவீதம் பொருந்தும். காங்கிரஸ் மேலிடத்தின் கண்டிப்பு காரணமாக, சமீபகாலமாக, வாயை மூடியபடி அமைதி காத்தார், சசி தரூர். ஆனால், அவரால் நீண்ட நாட்களுக்கு அமைதியாக இருக்க முடியவில்லை. ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்தவர்களை தரக்குறைவாக விமர்சித்து எடுக்கப்பட்டுள்ளதாக, சர்ச்சையில் சிக்கியுள்ள பத்மாவதி ஹிந்தி பட விவகாரத்தில், தன் நாக்கை சுழற்றியுள்ளார், சசி தரூர்.இந்த படத்துக்கு, வட மாநிலங்களில் அதிகமாக வசிக்கும், ராஜபுத்ர சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல், அமைதி காத்து வருகின்றனர்.ஆனால், சசி தரூர், 'ராஜபுத்ர சமூகத்தினர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஏவல் வேலைகளை பார்த்தவர்கள்' என, உளறிக் கொட்டவே, காங்கிரஸ் மேலிடம், டென்ஷனாகி விட்டது. 'நீங்கள் இப்படி உளறினால், ராஜபுத்ர சமூகத்தினரின் ஒரு ஓட்டு கூட நமக்கு கிடைக்காது' என, மேலிட தலைவர்கள் கடிவாளம் போட்டனர்; அதெல்லாம், சசி தரூருக்கு உறைக்கவில்லை.சமீபத்தில், உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட, இந்தியாவைச் சேர்ந்த, மானுஷியை பற்றியும்கிண்டலடித்து, கருத்து தெரிவித்தார். நொந்து போன, காங்., தலைவர்கள், 'இந்த ஆளு ரொம்பவும், படுத்தி எடுக்குறாருப்பா...' என, புலம்புகின்றனர்.


விரக்தியின் விளிம்பில்...!
'அவமானப்படுத்துவாங்கன்னு தெரியும்; ஆனால், இந்த அளவுக்கு அவமதிப்பாங்கன்னு, கனவில் கூட நினைக்கவில்லை' என, கண்களை கசக்குகின்றனர், பா.ஜ., மூத்த தலைவரான, அத்வானியின் தீவிர விசுவாசிகள். அத்வானிக்கு, 90 வயதாகி விட்டது. வயதை காரண மாக வைத்து, அவருக்கு, மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது. மோடி - அமித் ஷா கோஷ்டி, தன்னை ஓரம்கட்டுவதை உணர்ந்த அத்வானி, 'வயதானகாலத்தில், நமக்கு எதற்கு வம்பு' என, அமைதியாக ஒதுங்கி விட்டார்.ஜனாதிபதி தேர்தல்அறிவிப்பு வெளியான போது, பா.ஜ., சார்பில், அத்வானி பெயர் அறிவிக்கப்படும் என, அவரது விசுவாசிகள் கூறி வந்தனர்.ஆனால், அதிகம் பிரபலமில்லாத, ராம்நாத் கோவிந்த், வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, ஜனாதிபதியாகவும் பதவி ஏற்று விட்டார்.இதெல்லாம், அத்வானிக்கு கவலையை ஏற்படுத்தினாலும், அமைதியாக ஒதுங்கி, வேடிக்கை மட்டும் பார்த்து வந்தார்.இந்த நேரத்தில் தான், குஜராத் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இங்குள்ள காந்தி நகரிலிருந்து தான், 20 ஆண்டுகளாக, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார், அத்வானி.ஏற்கனவே, சட்டசபை தேர்தல் நடந்த போதெல்லாம், அத்வானி, குஜராத் முழுவதும் தீவிர பிரசாரம் செய்வார். ஆனால், இந்த முறை, பிரசாரத்துக்கு, அவர் அழைக்கப்படவில்லை. இது குறித்து அவரது விசுவாசிகள் கேள்வி எழுப்பிய போது, மெல்லிய சிரிப்பை மட்டும் அர்த்தத்துடன் சிந்தி விட்டு, அமைதி காக்கிறார் அத்வானி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement