Advertisement

அறிவியல் ஆயிரம்


டிசம்பர் பூக்கள்


கார்த்திகையில் மலரும் செங்காந்தள் மலரை கார்த்திகைப் பூ என்று தமிழில் கூறுகிறோம்.
டிசம்பரில் மலர்கின்ற வயலட் நிறத்தில் உள்ள பூ அது பூக்கும் மாதத்தின் பெயரால் டிசம்பர்
பூ என்றே அழைக்கப்படுகிறது. 'பர்லேரியா கிரிஸ்டாட்டா' என்ற தாவரவியல் பெயருடைய
டிசம்பர் பூ, தாய்லாந்தில் மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. இந்தப் பூக்களில் இருந்து
தயாரிக்கப்படும் மருந்து சிறுநீர் பெருக்கியாகவும், ரத்த சுத்திகரிப்பானாகவும் பயன்படுகிறது. டிசம்பர் பூக்கள் வெள்ளை நிறத்திலும் பூக்கின்றன.


தகவல் சுரங்கம்


பெண்ணுக்கு பெருமை


சபரிமலை என்ற பெயர் வரக் காரணம் சபரி வாழ்ந்த மலை. 'சபரி' என்று வால்மீகி குறிப்பிடுவதை கம்பர், தமிழ் ஒலிக்குறிப்பிற்கேற்ப 'சவரி' என்று காட்டினார். கம்பராமாயணத்தில்
சவரி என்றழைக்கப்படும் சபரியைப் பற்றி 9 பாடல்களே உள்ளன. ஆனால் கம்பர் இந்த
9 பாடல்களையே தனிப்படலமாக 'சவரி பிறப்பு நீங்கு படலம்' என அமைத்துள்ளார். இந்த படலம் ஆரண்ய காண்டத்தில் வருகின்றது. துளசிதாசர் 'ராம சரித மானஸ்ூ' காவியத்தில் சபரியைக் காட்டுகிறார். அதில் சபரி செய்ததாக ஒன்பது வகையான பக்திகளைக் கூறுகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement