Advertisement

'டவுட்' தனபாலு

காங்., துணைத் தலைவர் ராகுல்: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், பெரும் பணக்காரர்களே பலன் அடைந்தனர். ஏழை மக்கள், ஏ.டி.எம்., வாசலில் நின்ற போது, பணக்காரர்கள், வங்கியின் பின் வாசல் வழியே சென்று, தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கி விட்டனர்.
டவுட் தனபாலு: நீங்க, ஒருமுறை, ஏ.டி.எம்.,மில் நின்று, 2,000 ரூபாய் எடுத்தீங்க... அதோட சரி... உங்க கட்சியின் மூத்த தலைவர்கள், அதைக்கூட செய்யலை... எல்லாரும், பரம ஏழைகள்னு சொல்றீங்களா... நீங்க சொல்ற இந்த குற்றச்சாட்டை, உங்களுக்கு எதிராக யாரும் கேட்டால், என்ன பதில் சொல்வீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'
--
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: பயங்கரவாதத்தை வேரறுக்கும் பட்சத்தில், நாட்டின் வளர்ச்சி இன்னும் வேகம் எடுக்கும்.
டவுட் தனபாலு: மக்களுக்கு சிறு சிறு சிரமங்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை, நாட்டின் வளர்ச்சிக்காக அதிரடி முடிவை எடுத்து, அவற்றை செயல்படுத்துவோம்னு துணிந்த நீங்க, பயங்கரவாதத்தை வேரறுப்பதில், எதற்கு இவ்வளவு யோசிக்குறீங்க... உங்க கைகளை யார் கட்டிப் போட்டிருக்கா என்ற, 'டவுட்' ஏற்படுதே...!
--
மஹாராஷ்டிர மாநில காங்., செயலர் செஷாத் புனேவாலா: ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தலைவர்களாவதற்கு, காங்கிரஸ் கட்சி என்ன குடும்பவியாபாரமா?
டவுட் தனபாலு: இவ்வளவு காலமா, தாய் தலைவர், மகன் துணைத் தலைவர் என்ற நிலை தான் இருந்துச்சு... அப்போது எல்லாம், இந்தக் கேள்வியை எங்கே வெச்சிருந்தீங்க... கட்சி தாவ முடிவு செய்ததால, இந்த விமர்சனத்தை வைக்குறீங்களா... இல்லை, இது நாடகமா என்ற, 'டவுட்' தான் வருது...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement