Advertisement

பக்கவாத்தியம்

காங்கிரசின் கொ.ப.செ.,வாக திருமா?

மறைந்த பிரதமர், இந்திரா நுாற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், காங்., சார்பில், கோவையில் நடந்தது. ஸ்டாலின், தா.பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்., மாநில தலைவர், திருநாவுக்கரசர் பேசும் போது, 'அன்னை இந்திராவின் சாதனைகள் குறித்து, எங்கள் கட்சி தலைவர்களை விட, மற்ற கட்சி தலைவர்கள் பேசியதை கேட்க தேன் போல, இனிமையாக இருந்தது. 'அதிலும், இந்திராவை பற்றி, திருமாவளவன் ரொம்ப அற்புதமாக பேசினார். அவரை, எங்கள் கட்சி கூட்டங்களில் பேச வைத்தால், காங்கிரசை இன்னும் வளர்க்கலாம் போல...' என்றார்.
கூட்டத்தில் இருந்த, காங்., தொண்டர், 'இவர் பேசுறதை பார்த்தா, திருமாவளவனை, காங்கிரசின் கொள்கை பரப்பு செயலராவே அறிவிச்சிடுவார் போலிருக்கே...' என, 'கமென்ட்' அடித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    திருமாவும் எங்கேயாவது சான்ஸ் கிடைக்காதா, சட்டமன்றத்துக்குள் போய்விடமாட்டோமா என்றுதான் ஏங்குகிறார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement