Advertisement

அக்கம்பக்கம்

தலைக்கு மேல் கத்தி!

'இவரால், நம் பதவிக்கும் ஆபத்து வந்து விடும் போலிருக்கிறதே; வேறு கட்சிக்கும் போகாமல், இங்கேயே இருந்து, நம் கழுத்தை அறுக்கிறாரே' என, தன் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான, யஷ்வந்த் சின்ஹாவை நினைத்து புலம்புகிறார், மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர், ஜயந்த் சின்ஹா.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில், நிதி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்புகளுடன் செல்வாக்குடன் விளங்கியவர், யஷ்வந்த் சின்ஹா. கடந்த லோக்சபா தேர்தலில், 'உங்களுக்கு, 80 வயதாகி விட்டது. உங்களுக்கெல்லாம் சீட் தர முடியாது' என, பா.ஜ., மேலிடம், இவரை ஓரம் கட்டி வைத்து விட்டது. ஆனால், அவரது மகன், ஜயந்த் சின்ஹாவுக்கு, சீட் கொடுத்து, அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கியது, கட்சி மேலிடம்; இதை, யஷ்வந்த் சின்ஹாவால் ஜீரணிக்க முடியவில்லை. தொடர்ந்து, பிரதமர் மோடியையும், அவரது திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்; இது, ஜயந்த் சின்ஹாவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
'வயதான காலத்தில், இவர் வேறு, நம்ம உயிரை வாங்குகிறார். காங்கிரசில் சேர வேண்டியது தானே... பா.ஜ.,வில் இருந்து விலகாமல், நமக்கு தொல்லை கொடுக்கிறாரே' என, புலம்புகிறார், ஜயந்த் சின்ஹா. சக அமைச்சர்களோ, 'யஷ்வந்த் சின்ஹா, பா.ஜ.,வில் இருக்கும் வரை, ஜயந்த் சின்ஹாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கத் தான் செய்யும்' என, நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement