Advertisement

ஊட்டியில் குறும்பட விழா


ஊட்டியில் குறும்பட விழா


ஊட்டியில் வருகின்ற 08,09,10/12/17 ஆகிய தேதிகளில் குறும்பட (short films)விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் எட்டு நாடுகளில் இருந்து வந்த 120ற்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.

மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்கவும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கவும் திரையுலத்தினர் உள்ளீட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

கோவா எப்படி திரைப்பட விழாவிற்கு பெயர் பெற்று உள்ளதோ அது போல ஊட்டியை கலை மற்றும் கலாச்சாரத்திற்கான முகவரியாக மாற்றும் ஒரு முயற்சி இது என்கின்றனர் விழா அமைப்பாளர்கள்.

இந்த விழா தொடர்பியல் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் மேலும் சினிமா ரசனையை அதிகப்படுத்தும் சினிமாவை வியாபார நோக்கமின்றி கலையாக அனுகவைக்கும்

தமிழ்நாடு கேரளா கர்நாடகா,ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் திரையுலக வல்லுனர்களிடம் படங்கள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்ய உதவும் களமாக இந்த விழா இருக்கும்.

இந்த விழாவில் யார் வேண்டுமானாலும் பார்வையாளர் கட்டண அடிப்படையில் பங்கேற்கலாம்,இது குறித்து மேலும் விவரம் அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டியவர் செய்தி தொடர்பு இயக்குனர் அருண்காந்தி எண்:9600156650.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement