Advertisement

சிங்கப்பூருக்கு கிளம்புது ஆவின் பால்

ஆவின் நிறுவனத்தின், பதப்படுத்தப்பட்ட பால், இரு தினங்களில் சிங்கப்பூருக்கு விற்பனைக்காக செல்லவுள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்து வருகிறது.ஆவினின் வருவாயை பெருக்கும் விதமாக, ஆவின் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

மொபைல் ஆப் : அதன் ஒரு பகுதியாக, குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும், ஆறுமாதம் வரை கெட்டுப் போகாத, உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால், சிங்கப்பூரில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம், ஆவின் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.
இன்னும் இரு தினங்களில், 'கன்டெய்னர்' மூலம், பதப்படுத்தப்பட்ட பால் சிங்கப்பூருக்கு விற்பனைக்காக அனுப்பப்படவுள்ளது.

இது குறித்து, ஆவின் மேலாண் இயக்குனர், காமராஜ் கூறியதாவது: ஆவினின் வருவாயை பெருக்குவதற்காக, சிங்கப்பூருக்கு பால் ஏற்றுமதி செய்யவுள்ளோம்.ஏற்றுமதி முகவர்கள் மூலம், சிங்கப்பூரில் உள்ள, 150 சில்லரை விற்பனையகங்களில், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகள், வணிக வளாகங்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில், இந்த பால் விற்பனை செய்யப்படவுள்ளது.இது, சிங்கப்பூர் தர நிர்ணய ஆய்வு மையத்தால் ஆய்வு செய்யப்பட்டு விற்கப்படவுள்ளது.அங்குள்ள ஆவின் சில்லரை விற்பனையாளர்கள், 'மொபைல் ஆப்' மூலம், பால் கொள்முதல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று லட்சம் லிட்டர் : இதுமட்டுமின்றி, ஆவின் எட்டு வகையான நறுமணப்பால், மோர் உள்ளிட்ட ஆவின் பொருள்களை, விரைவில் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது. 20 ஆயிரம் லிட்டர் பால், இன்னும் இரு தினங்களில், கன்டெய்னர் மூலம், சிங்கப்பூர் செல்லவுள்ளது. ஒரு மாதத்திற்கு, 15 கன்டெய்னர் வரை, மூன்று லட்சம் லிட்டர் பால், ஏற்றுமதி செய்யப்படும்.விரைவில், மலேஷியா, மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, இந்தோனிஷியா உள்ளிட்ட, 11 தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு, பால் ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை, ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-நமது நிருபர்-

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார்களாம் (யார், யாருடைய வங்கிக்கணக்கில் எல்லாம் இருப்பு உயரப்போகுதோ தெரியவில்லை).

 • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Good work by Aavin. Let us start exporting to all countries. Hope Aavin will implement stricter quality control.

 • adithyan - chennai,இந்தியா

  இந்த பால் நிஜ பால் தானே.அமைச்சர் சந்தேகப்பட்ட பால் அல்லவே.

 • RamboramkumarKumar -

  நம் தமிழ் நாட்டில் அனேக இடங்களில் ஆவின் பால் கிடைப்பது இல்லை. பிறகு ஏன் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி?. ஏய் அ தி மு க ஏகாதிபத்திய அரசே!!!!.

 • ushadevan -

  நல்ல விஷயம். அங்கு ஏற்கனவே இருக்கிற பால்,சப்ளயர்ஸ் மேல கேஸ் போட்டு நம்ம பால் அமைச்சர் பிஸினஸை கெடுத்துட போறாறு.

 • pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா

  அஞ்சு அடிக்கு ஒன்று என இருக்கும் ஆவின் பால் டீக்கடைகள், உண்மையாக ஆவின் பால் நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்று நடத்தப்படுகிறதா இல்லையா என எப்படி தெரிந்து கொள்வது? ஒவ்வொரு கடைக்கும் ஏதாவது ஒரு அடையாள எண் , பெர்மிட் நம்பர் என ஏதேனும் ஓன்று உள்ளதா? கடையில் தொங்க விடப்படுமா? இதில் தமிழருக்கு முன்னுரிமை உண்டா? வெளிமாநிலத்தான் இங்கு வந்து பொழப்பில் மண்ணை போடுவது எத்தனை நாளைக்கு? ஏதாவது செய்யிங்கப்பா. "சாயா" னு வந்தவன் இங்கு "ஹாயா" இருக்கிறன், நம்மவர் ஓயாமல் ஓட வேண்டி இருக்குது. அம்மா டீக்கடைனு ஏதாவது ஆரம்பிக்கப்பா, தமிழ்நாடு வாழும், உங்களுக்கும் புண்ணியமாகப் போகும்.

 • spr - chennai,இந்தியா

  சிறப்பான முயற்சி பாராட்டுகள். "இந்திய வெண்மை புரட்சியின் தந்தை" திரு குரியன் சென்னையில் படித்த கல்வி நிறுவனங்கள் லயோலாக் கல்லூரி,கிண்டி பொறியியல் கல்லூரி - "இந்தியாவின் வெண்மைப்புரட்சியின் தந்தை" எனப் பாராட்டப்பெற்றார் . உலகமே "பிராண்ட் நேம்" என்பதனைப் பற்றி அவ்வளவாக அறியாத நிலையில் "டேஸ்ட் ஆப் இந்தியா" என்று அமுல் பொருட்களை அறிமுகப்படுத்தியவர் அவரின் பிறந்த நாள் 26 நவம்பர் பலரால் மறக்கப்பட்ட ஒன்று அவரைப்போல ஒருவர் தமிழகத்தில் இருந்திருந்தால், ஜெயலலிதாவின் இலவச மாடு வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி தமிழகத்திலும் ஒரு பால் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தியிருப்பார் வாய்ப்பை இழந்துவிட்டோம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement