Advertisement

டீ கடை பெஞ்ச்

போக்குவரத்து துறையில் பூடகமாக நடக்கும் முறைகேடு!

''போட்டி போட்டு வாங்கிட்டு இருக்காங்க பா...'' என, முதல் விஷயத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''என்னத்தை, யாரு வே வாங்குதா...'' என, விசாரித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''பி.எட்., கல்லுாரிகளுக்குன்னு, தனியா கல்வியியல் பல்கலை இருக்கு... இதன் உயர் அதிகாரி, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' பத்தி, ஒரு புத்தகம் எழுதியிருக்காரு பா...
''இதை, எல்லா கல்லுாரிகளும் வாங்கி பயன்படுத்துங்கன்னு உத்தரவு போட்டிருக்காங்க... 250 ரூபாய் புத்தகத்தை, கல்லுாரிகளுக்கு, 150 ரூபாய்னு சலுகை விலையில குடுக்குறாங்க பா...
''அதனால, எல்லா கல்லுாரிகளும் போட்டி போட்டு வாங்கிட்டு இருக்கு... ஒரு தனியார் கல்லுாரி, 10 ஆயிரம் புத்தகங்களுக்கு ஆர்டர் குடுத்திருக்கு பா...'' என, முடித்தார்
அன்வர்பாய்.''அடுத்து, யார் தலை உருளும்ன்னு விவாதம் பண்ணிட்டு இருக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''கோவை மாநகர போலீஸ்ல, சிறப்பு, எஸ்.ஐ.,யும், ரெண்டு போலீசாரும், லாரி டிரைவர்கிட்ட லஞ்சம் வாங்குறப்ப, மாவட்ட, எஸ்.பி., கையும்,
களவுமா பிடிச்சாரு...''அப்புறமா, எஸ்.பி., கட்டுப்பாட்டுல இருக்கிற, கோவில்பாளையம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரும், ஏட்டும், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்குனப்ப, லஞ்ச ஒழிப்பு போலீஸ்ல சிக்கிட்டாவ வே...
''இதனால, அடுத்து லஞ்ச வழக்குல சிக்க போறது மாநகர போலீசா, மாவட்ட போலீசான்னு அவங்களுக்குள்ள பட்டிமன்றமே நடக்கு...''இந்த பயத்துல, இப்ப, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் எல்லாம் போன்ல, 'டீலிங்' பேசுறதே இல்லை... எதா இருந்தாலும் நேர்ல பேசி, 'பைசல்' பண்ணிக்கிடுதாவ வே...'' என்றார்
அண்ணாச்சி.''காதும் காதும் வச்சா மாதிரி முடிச்சிடுறாங்கன்னு புலம்புறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.''யாரு ஓய்...'' என்றார் குப்பண்ணா.''தமிழக அரசின் போக்குவரத்து துறையில, பணி மூப்பு அடிப்படையில, பதவி உயர்வு, இடமாறுதல் தருவாங்க...
''காலியிடங்களுக்கு ஏத்த மாதிரி, பதவி உயர்வு, இடமாறுதல் பட்டியலை தயாரிச்சு, போக்குவரத்து துறை அலுவலக தகவல் பலகையில ஒட்டுவாங்க... அதனால, யார் யாருக்கு பதவி உயர்வு கிடைச்சது, எந்த ஊருக்கு மாறி போயிருக்காங்கன்னு தெளிவா தெரியுமுங்க...
''ஆனா, இப்ப மூணு வருஷமா, தகவல் பலகையில எதுவும் ஒட்டுறது இல்லை... இடமாறுதல்ல போறவருக்கும், அவர் புதுசா போற ஆபீசுக்கும் தான் தகவல் தெரிவிக்குறாங்க... பதவி உயர்வும்
இப்படி தான், பூடகமா நடக்குதுங்க...''இதனால, தகுதியான பலருக்கு பதவி உயர்வு கிடைக்காம பாதிக்கப்படுறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி. குளிருக்கு இதமாக, சூடான பில்டர் காபி சகிதமாக நாயர் வர, நண்பர்கள் வாங்கி பருக துவங்கினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement