Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை


'களுக்' எனச் சிரிக்கத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி
: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, சமத்துவ மக்கள் கட்சியின், மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.


ராஜ்யசபா, எம்.பி., வைத்திய லிங்கம் பேட்டி: தினகரன் அணியிலிருந்து அண்மையில் மூன்று, எம்.பி.,க்கள், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இணைந்துள்ளனர். மேலும் பலர், எங்கள் பக்கம் வருவர். இருகரம் கூப்பி வரவேற்க தயாராக இருக்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வில், எந்த குளறுபடியும் இல்லை. முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதலின்படி, வேட்பாளர் தேர்வு சுமுகமாகவும், நல்லமுறையிலும் நடைபெறுகிறது.



ஆர்.கே.நகர் தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ் பேட்டி
: ஜெ., தொகுதி என மார்தட்டிக் கொள்ளும் வகையில், ஆர்.கே.நகரில் எதுவும் இல்லை. இவ்வளவு ஏன்... எந்தவித அத்தியாவசிய அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. மழை வெள்ளத்தில் கூட முதல்வர் தந்தது, மூன்று ரூபாய் பிஸ்கட் தான். மக்கள் எதிர்பார்ப்பது நிரந்தரமான குடிநீர் வசதி, சுத்தமான சுற்றுச்சூழல் போன்ற எளிய கோரிக்கைகள் தான். இவற்றைக் கூட செய்யாமல், விளம்பரத்திலேயே காலம் தள்ளும் இந்த அரசின் மீது, மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.



'அண்ணாதுரை, எம்.ஜி. ஆர்., சரி... மத்தபடி...' என, வேதனையுடன் சொல்லத் தோன்றும் வகையில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்
சு: தஞ்சையை வென்றவர் எவரும் கிடையாது. ஆனால், தஞ்சையை ஆண்ட சோழர்கள், பல வெளிநாடுகளை வென்றவர்கள். அத்தகைய சோழர்களின் கடற்படை வலிமையை பற்றி, பிரதமர் மோடியே புகழ்ந்து பேசியுள்ளார். இது தமிழனுக்கு பெருமை. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா வழியில் தமிழர்கள் முன்னேற, இந்த ஆட்சியை காப்பாற்றுவோம். தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். தமிழனை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்வுடன் செயல்படுவோம். அந்த கோபமே எங்களுக்கு லாபமாக மாறும்.




மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சென்ற முறையை போல், ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்யாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதன் மூலம் தான் பணப் பட்டுவாடா நடக்கிறது. இடைத்தேர்தல் பிரசாரத்தை ஒரு வாரமாக குறைக்க வேண்டும். இதை தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் பணப் பட்டுவாடாவை தவிர்க்க முடியும். கடந்த முறை ஒரு மாதம் பிரசாரத்திற்கு, தேர்தல் ஆணையம் அனுமதித்ததால் தான் அதிகப்படியான பணப் பட்டுவாடா நடந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    திமுக வினர் பணப்பட்டுவாடா செய்த விபரம் திருநாவுக்கு தெரியாதா என்ன?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement