Advertisement

இது உங்கள் இடம்

மாளிகைக்கு நல்ல காலம் பொறந்தாச்சு!


ஆர்.சாம்பசிவம், அரசு ஊழியர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: சென்னை, கிண்டி ராஜ்பவன், 1946 முதல், பல கவர்னர்களை கண்டிருக்கிறது.முன்னாள் கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, ராஜ்பவன் வளாகத்தில் காலையில், 'வாக்கிங்' செல்லும் போது, மாடுகள் பால் கறக்கும் டிப்போவிற்கு செல்வார்; அங்கு நாளிதழ்களை படிப்பார். பணியாளர்கள் குடியிருப்பு வழியாக சென்று, அவர்கள் நலனை விசாரித்து, உதவி செய்வார்; அவர்களின் இல்ல சுபநிகழ்ச்சிகளுக்கு நேரில் சென்று வாழ்த்துவார்.பி.சி.அலெக்சாண்டர் கவர்னராக இருந்த போது, விதி மீறி வாகனம் ஓட்டிய தன் மகளிடம் அபராதம் வசூலிக்கும்படி, போக்குவரத்து போலீசாரிடம் கூறினார். இப்படி அதிகார வரம்பு மீறாமல், அடக்கமாக இருந்த கவர்னர்களை ராஜ்பவன் கண்டதுண்டு.அதிகாரிகள் ஆலோசனைப்படி செயல்படும் கவர்னர்கள், 1933க்கு பின் தான் ராஜ்பவனில் இருந்தனர்.ராஜ்பவன் பணியாளர்கள், எது நடந்தாலும் வெளியில் வந்து போராடுவதில்லை. எந்த வழக்கு மன்றமும் பணியாளரை காப்பாற்றாது. அதிகாரிகள் தன் இஷ்டம் போல் சட்டத்தை வளைத்துக் கொள்வர். புதிதாக வரும் அதிகாரிகளுக்கு ராஜ்பவன் உள்ளே செல்ல வழி எது, வாசல் எது என்று தெரியாமல் உள்ளே வருவர்.அவர்களுக்கு வழி காட்டுவதே பணியாளர்கள் தான். அவ்வாறு உள்ளே வந்தவுடன், பணியாளர்களிடம் தான், முதலில் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவர். 1993 முதல் கவர்னரின் ராஜ்பவன், அதிகாரிகளின் ராஜ்ஜியபவனாக மாறிவிட்டது.இந்த அவலநிலை இன்று மாறி இருக்கிறது. ஒரு கவர்னர் எப்படி செயல்பட வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, புதிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒரு முன் உதாரணமாக இருக்கிறார். அவர் எளிய வாழ்க்கையை கடைபிடிக்கிறார்; ஆய்வு செய்வதின் மூலம் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குகிறார்.மாதந்தோறும் அரசு சம்பளம் பெறும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கிறார். அரசு பணத்தை வீணடிப்பதை தவிர்க்கிறார். தனக்கு பூச்செண்டு, சால்வை, பரிசு பொருட்கள் கொடுப்பதை தவிர்த்து விட்டார். இதிலிருந்தே தெரிகிறது, இவர் சுத்த கைக்கு சொந்தக்காரர் என்று!கவர்னர் மாளிகைக்கு மீண்டும் நல்ல காலம் பிறந்து விட்டது!


நஷ்டத்தைசரிகட்ட வழியேஇல்லையா?

எஸ்.காதர்பாட்ஷா, பேகம்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் எட்டு போக்குவரத்து கழகங்கள் உள்ளன.அவற்றில், 1.43 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 10 ஆயிரத்து, 800 பஸ்கள் நஷ்டத்தில் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களை, 1 கி.மீ., இயக்கினால், 8.56 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.உதாரணத்திற்கு, திண்டுக்கல் - திருச்சி இடையே, 100 கி.மீ., இயக்கினால் ஏற்படும் நஷ்டம், 856 ரூபாய் மட்டுமே.சராசரியாக ஒரு பஸ் ஆறு டிரிப் அடித்தால், தினசரி நஷ்டம், ௫,௧௩௬ ரூபாய். 2010 - 11ம் ஆண்டில், 2.04 கோடி பேர் பயணித்த அரசு பஸ்களில், இன்று, 1.79 கோடி பேர் மட்டுமே பயணிக்கின்றனர்.மாணவர்களுக்கு இலவச பாஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் மாதம், 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.அரசு போக்குவரத்து கழகங்களில், 13 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. 6 லட்சம் கி.மீ., ஓடியிருந்தாலும், ஏழு ஆண்டுகள் தொடர்ந்து இயக்கி இருந்தாலும், அந்த பஸ்களை இயக்கக்கூடாது.ஆனால், பெரும்பாலான பஸ்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகின்றன. வாங்கிய உதிரி பாகங்களுக்கு, அரசு செலுத்த வேண்டிய பாக்கி, மிக அதிகமாக உள்ளது.மேலும், 35 லட்சம் மாணவ - மாணவியர், மூன்று லட்சம் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதனால், பெரும்பாலும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.அரசு விரைவு பஸ்கள் போதுமானதாக இல்லை. பணி ஓய்வு, இறப்பு, வி.ஆர்.எஸ்., உள்ளிட்ட காரணங்களால், ஆண்டுக்கு, ௫,௫௦௦ ஊழியர்கள் வெளியேறுகின்றனர். ௨௦௧௨க்கு பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, பி.எப்., - கிராஜுட்டி உள்ளிட்ட பணப்பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை.உரிய பராமரிப்பு கிடையாது; ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வரவுக்கும், செலவுக்கும் சரியாக கணக்கு உள்ளது. இதனால், அன்றாடம் போக்குவரத்து கழக பஸ்களை இயக்குவதில், மிகுந்த சிரமம் ஏற்பட்டுஉள்ளது.தனியாருடன் போட்டியிடும் அளவிற்கு, அரசு போக்குவரத்து பஸ்களை இயக்க வேண்டுமானால், புதிய பஸ்களை வாங்க வேண்டும். அதில் ஊழல் இருக்கக்கூடாது.நிர்வாக சீர்கேடு அறவே நீங்கினால் மட்டுமே, அரசு போக்குவரத்து கழக பஸ்களை, ஓரளவிற்கு லாபத்தில் இயங்க வைக்க முடியும்!அ.தி.மு.க.,வினர்இனி கடை விரிக்க முடியாது!


எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இரட்டை இலை சின்னம் ஒருவழியாக, முதல்வர் பழனிசாமி அணிக்கு சென்று விட்டது. 'தேர்தல் கமிஷனின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்வேன்' என்கிறார், தினகரன்.'இனி வரும் தேர்தல்கள் அனைத்திலும், இரட்டை இலை சின்னத்திற்கே, குத்தோ குத்தென்று குத்தி, நாட்டை சூறையாட மக்கள் அனுமதி அளிப்பர்' என, அ.தி.மு.க.,வினர் மனப்பால் குடித்து கொண்டிருக்கின்றனர்.ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கு முதல், தினகரன் ஆட்டம் வரை, மக்கள் நன்கு பார்த்து, தவறை உணர்ந்துள்ளனர்.தி.மு.க., ஊழலில் சாதனை படைத்தது; அ.தி.மு.க., வரலாறு படைத்துக் கொண்டுஇருக்கிறது.அ.தி.மு.க.,விற்கு, தமிழக மக்கள் மறந்தும் கூட, ஓட்டளிக்க மாட்டார்கள். ஏற்கனவே செய்த பாவத்திற்கான தண்டனையை தான், நாளொரு துன்பமும், பொழுதொரு வேதனையுமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.அடுத்த மாதம் நடைபெறவுள்ள, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவுகள், அதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும்.எம்.ஜி.ஆர்., பெயரையும், புகழையும் மட்டும் வைத்து, இனி, அ.தி.மு.க.,வினர் தமிழகத்தில் கடை விரித்து வியாபாரம் செய்து பிழைக்க முடியாது!

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பல முன்னாள் இந்நாள் போக்குவரத்து மாண்புமிகுக்கள் பல ஆயிரக்கணக்கான கோடிகளில் திளைத்து உள்ளனர் ,ஆனால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இருக்கின்றன என்ன ஒரு முரண்பாடு ஜி.எஸ்.ராஜன் சென்னை .

  • rajaram avadhani - Tiruchy,இந்தியா

    மூன்று வாசகர்களின் கடிதங்களும் அருமை. வாழ்த்துக்கள்.

  • Udhaikumar - Chennai,இந்தியா

    மாளிகைக்கு நல்ல காலம் பொறந்தாச்சு புதிய கவர்னர் செய்து வரும் சில பணிகள் அவரது எளிமை எல்லாம் பாராட்டத்தக்கதே. ஆனால் ஒரு ஆளுநர் சட்டத்தை மீறி தனது எல்லைக்கு அப்பால் சென்று சில பணிகளை செய்கின்றார் என்று அனைத்துக் கட்சியினரும் அறிக்கை விடுகின்றனர். இந்த விஷயத்தில் ஏன் அனைவரும் ஆளும் கட்சி நீங்கலாக ஒன்று சேர்ந்துவிட்டனர் என்பதை யோசிக்கும் போது, ஒன்று மட்டும் தெளிவாகத்தெரிகின்றது, நாளை வேறொரு கட்சி ஆட்சியைப்பிடிக்குமேயானால், அது மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரானது என்றால் புதுச்சேரியில் துணை ஆளுநர், அம்மாநில முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்கும் குடைச்சல்களாக இங்கும் நடந்துவிடுமோ எனப்பயப்படுகின்றனர். புதிய ஆளுநரின் எளிமை ஒரு பக்கம் வரவேற்கத்தக்கது, அவர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தமிழை சில மாதங்களில் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடுவேன் என்று சொன்னது இன்னும் அவர் மீது மரியாதை ஏற்படுகின்றது. ஒரு ஆளுநர் என்பவர் கவர்னர் மாளிகையிலேயே இருந்துவிடாமல் இப்படி வெளியில் நடக்கும் சில அரசு செயல்பாடுகளையும் அவ்வப்போது கண்காணிப்பது அவசியம். அந்த வகையில் தற்போது வந்துள்ள புதிய ஆளுநரின் செயல்பாடு பாராட்டத்தக்கதே..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement