Advertisement

'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா: அ.தி.மு.க.,வை காப்பாற்ற, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், தியாக உணர்வோடு இணைந்திருக்கின்றனர். அவர்களுடன் நாமும் ஒருங்கிணைந்து, வெற்றி சரித்திரம் படைப்போம்.



டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வை காக்கவா... ஆட்சியைக் காக்கவா... தியாகம்னு நீங்க எதைச் சொல்றீங்க... இதுவரை, முதல்வர் பழனிசாமி தரப்பு, எதை எல்லாம் இழந்து இருக்கு... துணை முதல்வர் பன்னீர் தரப்பு, எதை எல்லாம் பறிகொடுத்து இருக்கு என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம், விலாவரியா விளக்குங்களேன்...!




சசிகலா அக்கா மகன் தினகரன்:
உச்ச நீதிமன்றம் வரை சென்று, இரட்டை இலை சின்னத்தை மீட்போம். 99 சதவீத தொண்டர்கள் எங்களிடம் உள்ளனர்.


டவுட் தனபாலு: வர வர, சினிமாவுல வர்ற காமெடி கேரக்டர் மாதிரியே ஆயிட்டிருக்கீங்க... இது முத்திப் போய், எதுல முடியுமோன்னு கவலையா இருக்கு... மக்கள் யாரும் உங்க பக்கம் இல்லேங்குறது, 'டவுட்'டே இல்லாம உங்களுக்கும், எனக்கும் தெரிஞ்சாலும், 'எவ்ளோ அடி வாங்கினாலும், வலிக்கவே மாட்டேங்குது'ன்னு சொல்றீங்களே... அதைப் பாராட்டணும்!



முதல்வர் பழனிசாமி:
இந்த இயக்கத்தில், அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவது, எதிரிகளின் கண்களை உறுத்துகிறது.


டவுட் தனபாலு: 'அணிகள் இணைந்தன... மனங்கள் இணையலை... பன்னீர் அணியைச் சேர்ந்தவர் என்பதற்காக, ஒதுக்கக் கூடாது'ன்னு, எம்.பி., மைத்ரேயன் தெரிவித்தாரு... பொதுமக்கள் முன்னிலையில், உங்களின் கட்சிக் கூட்டங்களிலேயே இது எதிரொலித்து வருது... உங்க கூடாரத்துல, எதிரிகள் யாருன்னு உங்களுக்கு இன்னுமா தெரியலே என்பது தான், என்னோட, 'டவுட்!'

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement