Advertisement

அக்கம் பக்கம்

இதெல்லாம் ரொம்ப ஓவர்!



'ஆனாலும், இந்த மனுஷன், அநியாயத்துக்கு ஆசைப்படுகிறார். இதெல்லாம் நல்லதுக்கா, கெட்டதுக்கா என தெரியவில்லை' என, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான, சந்திர சேகர ராவை பற்றி, அந்த மாநில மக்களே புலம்புகின்றனர்.சந்திரசேகர ராவ், ஒரு விளம்பர விரும்பி. அரசு திட்டங்களில் எல்லாம், தன் புகைப்படங்களை போட்டு, விளம்பரப்படுத்துவதில், அவருக்கு அலாதி சந்தோஷம்.நம் நாட்டில், ரூபாய் நோட்டுகளில் எல்லாம், மகாத்மா காந்தி படம் இடம் பெற்றிருக்கும். தேசத் தந்தை என்ற அடிப்படையில், அவருக்கு இந்த கவுரவத்தை அளித்துள்ளது, அரசு.சந்திரசேகர ராவும், தன்னை தெலுங்கானாவின் தந்தை என, நினைத்து விட்டார் போலிருக்கிறது. மாநிலத்தில் நிலம் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் புதிதாக, பட்டா புத்தகம் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த பட்டா புத்தகங்கள் அனைத்திலும், முதல்வர் சந்திரசேகர ராவின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம், எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.'தெலுங்கானா மாநிலம் உருவாக, சந்திரசேகர ராவ், தொடர் போராட்டங்களை நடத்தியது உண்மை தான்; அதற்காக, மகாத்மா காந்தி ரேஞ்சுக்கு, 'பில்டப்' கொடுத்துக் கொள்வதெல்லாம் ரொம்ப ஓவர்' என்கின்றனர் பொதுமக்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement