Advertisement

பக்க வாத்தியம்

மறக்க மனம் கூடுதில்லையே!


திருச்சியில், இந்திய கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன் பேட்டி அளித்தார். அப்போது, 'தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது தொகுதியில் செய்த பணிக்காக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கொடுக்க வந்த கமிஷனை வாங்காமல், முதல்வரை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள் என, கண்டித்து அனுப்பியதாக, ஜெயா, 'டிவி' பேட்டியில் சொன்னார். இதன்மூலம், தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடப்பது உறுதியாகியுள்ளது' என்றார்.இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'இப்ப, தி.மு.க.,வுக்கு வக்காலத்து வாங்குற இதே முத்தரசன், ௨௦௧௬ சட்டசபை தேர்தலப்ப, 'ஊழல் அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றா, மக்கள் நல கூட்டணியை ஆரம்பிச்சோம்னு பேசினதை, மறக்க மனம் கூடுதில்லையே...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள்
சத்தமின்றி சிரித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement