Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

தேர்தல் 'மை' அழியுமா


நாட்டின் முதல் தேர்தல் தொடங்கி இன்றுவரை மாறாத பொருளாக அடையாள மை உள்ளது. 1937 முதல், அடையாள மை தயாரிக்கப்படுகிறது., மைசூருவில் உள்ள 'மைசூரு பெயின்ட் அண்ட் வார்னிஷ் லிமிடெட்' மட்டுமே, அடையாள மை தயாரிக்கிறது. 15 நாட்கள் வரை இது அழியாது. இயற்கை சாயங்கள், சில வாசனைப் பொருட்கள், சில்வர் நைட்ரேட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, மை தயாரிக்கப்படுகிறது. 'அடையாள மை அழிகிறது' என வதந்திகள் பரவுவது உண்டு. ஆனால் எந்த வேதிப் பொருளைப் பயன்படுத்தினாலும், இந்த மை அழியாது என்பது அறிவியல் பூர்வ உண்மை.

தகவல் சுரங்கம்

நாச்சியார் கோயில் விளக்கு


திருக்கார்த்திகைக்கு நாச்சியார் கோயில் விளக்கு மிகவும் பிரசித்தம். இந்த விளக்கின் உச்சியில் அன்னப்பறவை இருக்கும். இந்த விளக்கு புவிசார் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளது. கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில், நாச்சியார் கோயில் உள்ளது. வைணவ சம்பிரதாயத்தில் பெண் தெய்வமான தாயாருக்கு முதல் மரியாதை என்பதால், ஊரின் பெயரே
நாச்சியார் கோயில் ஆனது. நாச்சியார் கோயிலில் விளக்கு செய்ய, பித்தளையோடு காவிரியில் இருந்து கிடைக்கும் கருப்பு நிற வண்டல் மண்ணும் பயன்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement