Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'உங்க கட்சியில, எத்தனை திருநங்கையர் உறுப்பினரா இருக்காங்க சார்... எந்த தொகுதியிலாவது, இதுவரை அவங்க போட்டியிட, வாய்ப்பு குடுத்திருக்கீங்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை: ஆந்திராவில், திருநங்கையருக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ள, அம்மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடுவுக்கு, என் மனமார்ந்த வாழ்த்துகள். தமிழக அரசும், திருநங்கையரின் வாழ்வாதாரத்தை உயர்த்த, இது போன்ற கொள்கைகளை வகுக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவருக்கு திருநங்கையர் என, பெயர் சூட்டியவர் கருணாநிதி; அவரது சார்பில், சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள்.


'கவர்னர் வாய் மூடி மவுனமாக இருந்தாலும், 'கமென்ட்' போடுறீங்க... வேலை செஞ்சாலும், 'கமென்ட்' போடுறீங்க... ஒரு பேச்சுக்குன்னு வச்சிக்குங்க... 'அரசியல் தலைவரா இருக்குற அன்புமணி, தான் வாழுற தொகுதியில, தினமும் சாக்கடை சுத்தம் செய்யணும்... எல்லாருக்கும் சோறு ஒழுங்கா கிடைக்குதான்னு வீடு வீடா ஏறி, 'செக்' செய்யணும்... கொசு வராமல் தடுக்க, எல்லார் வீட்டுலயும் இருக்குற அண்டா, குண்டான் எல்லாத்தையும் மூடி போட்டு மூடணும்'ன்னு, மக்கள் அறிக்கை விட ஆரம்பிச்சாங்கன்னா, உங்களால அதை பின்பற்ற முடியுமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி அறிக்கை
: இட ஒதுக்கீட்டு விதி, மரபுகளை, காற்றில் பறக்க விட்டு, நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்; அரசு சேவையில் உள்ள மருத்துவர்களை, முன்னுரிமை அடிப்படையில் நியமிக்க வேண்டும். இதில், ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து, விசாரணைக்கு ஆணையிட வேண்டும். அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போவதாக கூறி வரும் தமிழக கவர்னர், இப்பிரச்னையில தலையிட்டு, நீதி வழங்கினால் நன்றாக இருக்கும்
'அப்படி போடு அருவாள...' என, சொல்லத் தோன்றும் வகையில், பெங்களூரு போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து டி.ஐ.ஜி., ரூபா பேட்டி
: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்துள்ள ஊழல்கள் குறித்த விபரங்கள், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையிலான, உயர்மட்டக் குழு அறிக்கையில் இடம் பெறவில்லை. இதையறிந்து, என் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கலாம். அனைத்து வகையான பணிகளிலும், இதுபோன்ற பிரச்னை வருவது பொதுவானது. இதற்கு பயப்பட வேண்டியது இல்லை; இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.'கடந்த, பார்லி., கூட்டத்துலயே அதையெல்லாம் செஞ்சிட்டு தானே இருந்தாரு... உங்க கட்சியில, பிரதமரா இருந்த, மன்மோகன் சிங்கின் மவுனத்தை விடவா, மோடியோட செயல் மோசம்ங்கிறீங்க...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா பேச்சு:
தனக்கு எதிரான கருத்துக்களை சகித்து கொள்ளும் தன்மையோ, ஜனநாயக குணநலன்களோ, பிரதமர் மோடிக்கு கிடையாது. உண்மையில், தன் நடவடிக்கைகள் சரி என்பதை, அவர் உறுதியாக நம்பினால், பார்லி., கூட்டத்தொடரை உடனடியாக கூட்டி, அங்கு எதிர்க்கட்சிகளின் கேள்விகளை நேரடியாக எதிர் கொள்ள வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement