Advertisement

'டவுட்' தனபாலு

சசிகலா அக்கா மகன் தினகரன்: தகுதி நீக்கம் செய்யப்படுவோமோ என்ற பயத்தில், மூன்று, எம்.பி.,க்களும் என்னிடம் சொல்லித் தான் அங்கு சென்றுள்ளனர். சின்னத்திற்கு, இடைக்கால தடை வாங்கியதும், மீண்டும் இங்கு வருவதாக கூறியுள்ளனர்.



டவுட் தனபாலு: 'பதவியை பணயம் வைத்து, நாம மட்டும் ஏன், இன்னும் இந்தப் பக்கம் இருக்கணும்... தினகரனிடம் சொல்லிவிட்டு, பழனிசாமி பக்கம் போயிடலாம்'னு, உங்க பக்கம் இருக்குற கொஞ்சநஞ்ச மக்கள் பிரதிநிதிகளும், மூட்டை கட்ட, நீங்களே, நோட்ஸ் எடுத்துக் கொடுத்துட்டீங்க என்பது, 'டவுட்' இல்லாமத் தெரியுது...!



த.மா.கா., தலைவர் வாசன்:
ஆர்.கே.நகர் தேர்தலில், களத்தில் இருந்து ஒதுங்கி நிற்க முடிவு செய்துள்ளோம்.



டவுட் தனபாலு: கடந்த முறை பன்னீர் அணிக்கு ஆதரவு அளித்தீங்க... இப்போ, என்னாச்சு என்ற, 'டவுட்' வருது... பழனிசாமி அணியுடன் அவர் இணைந்ததில் உடன்பாடு இல்லையா... அதைப் பத்தி, இதுவரை கருத்து கூறாமல் இருப்பது ஏன்... விளக்கினால் தானே, நீங்க எடுக்கும் முடிவுக்கான காரணம், கட்சியினருக்குப் புரியும்...!



தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு
: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சிக்கு ஓட்டளித்தால் மட்டுமே, தொகுதியில் நல்லது நடக்கும் என்பது, மக்களுக்கு தெரியும்.



டவுட் தனபாலு: 'ஆளும் தரப்பு பக்கம் நின்றால் தான், எல்லாம் நல்லா நடக்கும்னு நினைத்து தான், எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும், பழனிசாமி அணியில் இருக்குறீங்களா... அதையே, எங்களிடம் எதிர்பார்க்குறீங்களா... இதை வெளிப்படையாகச் சொல்ல, ஏன் கூச்சப்படுறீங்க'ன்னு, மக்கள், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement