Advertisement

பக்க வாத்தியம்

'அமைச்சரிடம் யார் சொல்றது?'


மதுரையில், போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. போக்குவரத்து முதன்மை செயலர், தயானந்த் கட்டாரியா தலைமையில், மதுரை உட்பட, ஆறு மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் பேசும் போது, 'நான், பல வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். அங்கு வாகனங்களை ஓட்டுவோர், கட்டாயம், 'ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ்' வைத்துள்ளனர். அதை, இங்கே கடைப்பிடிக்க துவங்கிய பின், இந்தாண்டு, 420 உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு உள்ளன' என்றார்.
'ஒரிஜினல் லைசென்ஸ் வச்சிருக்கறதுனால விபத்துகள் குறையலை... நாம போக்குவரத்து விதிகளை கடுமையா அமல்படுத்துனதால தான், விபத்துகள் குறைஞ்சிருக்கு... இதை, அமைச்சரிடம் யார் எடுத்துச் சொல்றது...' என, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஒருவர் முணுமுணுத்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    Nowadays the ministers are giving statements foolishly like jokers without any thinking and talking as they wish.As per this minister by possessioning original driving licence while driving how the lives were saved from the accidents. He should not forget that due to the strict discipline of following of Rule of The Road are the reasons for save of lives from accidents but not the Miracle of the possession of original driving licence of the drivers.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement