Advertisement

சொல்கிறார்கள்

கிரீன் டீ குடிக்கலாம்; பால் தவிர்க்கலாம்!


மன நல மருத்துவர், அசோகன்: ஒவ்வொரு வினாடியும் ஆக்சிஜன், நம் உடலுக்குள் சென்று, கார்பன் - டை - ஆக்சைடு வெளியே வருகிறது. உள்ளே சென்ற ஆக்சிஜன் மூலக்கூறுகளால், நம் செல்கள் ஆற்றலைப் பெறுகின்றன. இதை, 'ஆக்சிடேஷன்' என, அழைக்கிறோம்.இப்படி நடக்கும்போது சில ஆக்சிஜன் மூலக்கூறுகளில், ஒரு சில எலக்ட்ரான்கள் மட்டும் மீதம் ஆகும். இவை, பிற செல்களில் உள்ள மூலக்கூறுகளுடன் வினைபுரியத் துவங்கும். இதனால் ஏற்படும் பாதிப்பு தான் பெரும்பாலும், மன அழுத்தமாகவோ அல்லது வேறு பல நோய்களுக்கு இரண்டாம் தரக் காரணிகளாகவோ வெளிப்படுகின்றன.மேலும் இவை, தீங்குகளுக்கு மட்டுமே வழி வகுக்காமல், இதற்கு முன் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்ய, உடல் இயக்கத்தைத் துாண்டி விடுகின்றன. இந்தப் பணி நடந்து முடிந்த பின்னும் மீதமிருக்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் தான், இந்த ஆக்சிஜனேற்ற அழுத்தம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த துவங்குகின்றன. இதனால் செல், புரதம் மற்றும் மரபணுக்கள் பாதிக்கப்படுகின்றன.அதீத களைப்பு, நினைவிழப்பு அல்லது மறதி, தசை மற்றும் மூட்டு வலி, சுருக்கங்கள், சருமநோய், இளநரை, கண் பார்வை குறைவு, தலைவலி, சத்தங்களை கேட்டால் எரிச்சல், அடிக்கடி ஏற்படும் நோய் தொற்று ஆகியவை, இதன் அறிகுறிகளாகும்.நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருப்போருக்கு, இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், ஒருசில வாழ்வியல் மாற்றங்களை செய்து, கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
நிலத்தின் அடியில் வளரும் காய்கறி, துரித உணவுகள் மற்றும் மசாலா சேர்த்த உணவுகள், குளூக்கோஸ் அதிகம் உள்ள பொருட்களை தவிர்க்கலாம். பூண்டு, முட்டைகோஸ் மற்றும் வெங்காயம் அவசியம். கொய்யா பழம் மிகவும் நல்லது. அதில் இருக்கும் வைட்டமின், 'சி' இந்தப் பிரச்னைக்கு ஏற்ற மருந்து. கிரீன் டீ நிறைய குடிக்கலாம்; பால் தவிர்க்கலாம்.உடல் உழைப்பு இல்லையெனில், தினமும் காலையில் நடக்க வேண்டும். முடிந்தால், 'ஜாக்கிங்' போகலாம்; மன அழுத்தம் வேண்டாம். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருங்கள். உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தும்போது, கூடியவரை, கதவின் கைப்பிடி, குழாய்களால் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.சரும நோய்கள் ஏற்படும்போது, கூடுதல் கவனம் தேவை. அதனால், உங்கள் உடலில் ஆக்சிடேஷன் அதிகரிக்கும். மருத்துவரை அவ்வப்போது சந்தித்து, அறிவுரை பெறுவது அவசியம்.
நிலைமை மோசமானால், இந்த ஆக்சிஜனேற்ற அழுத்தம், கேன்சர் உட்பட, பல தீங்குகளுக்குக் கூட வழிவகுக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement